புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2014

பாராளுமன்ற தேர்தலில் அதி.மு.க. 217 சட்டசபை தொகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் ஆதர.வையும் செல்வாக்கையும் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் அதி.மு.க. 217 சட்டசபை தொகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் ஆதர.வையும் செல்வாக்கையும் பெற்றுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றி வரலாற்று சாதனை பெற்றுள்ளது. இதுவரை எந்த கட்சியும் தனித்து போட்டியிட்டு இந்த அளவுக்கு எம்.பி.க்களை பெற்றுள்ளது.
முதல் முறையாக அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு இந்த வெற்றியை பெற்றுள்ளது. முதல்– அமைச்சரும் அ.தி.மு.க. பொது செயலாளருமான ஜெயலலிதாவின் துணிச்சலான, நேர்மையான நடவடிக்கைக்கும், அவரது மக்கள் நலத்திட்டங்களுக்காகவும் மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளார்.
மேலும் இந்த தேர்தலில் அ.தி.மு.க. 44.30 சதவீத ஓட்டுகள் பெற்று மகத்தான சாதனை புரிந்துள்ளது. இதுவரை எந்த கட்சியும் இந்த அளவுக்கு ஓட்டுக்களை பெற்றது இல்லை. எம்.ஜி.ஆர். காலத்தில் கூட அ.தி.மு.க. இந்த அளவுக்கு வாக்குகளும், வெற்றியும் பெற்றது இல்லை.
தமிழகத்தில் கன்னியாகுமரி, தர்மபுரி ஆகிய 2 தொகுதியில் மட்டும் பா.ஜனதா கூட்டணிக்கு கிடைத்துள்ளது. ஆளும் கட்சியாக, எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவிடாமல் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளையும் அள்ளிச் சென்றுவிட்டது.
முதல்–முறையாக சென்னையில் உள்ள 3 எம்.பி. தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் 217 சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க. ஓட்டுக்களை அள்ளிக்குவிந்துள்ளது. தமிழக சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 151 ஆக இருந்தாலும் பாராளுமன்ற தேர்தல் வெற்றியின் அடிப்படையில் 217 சட்டசபை தொகுதிகளை அ.தி.மு.க. தன் வசப்படுத்தியுள்ளது.
ஒரு பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. தற்போது 217 தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு அமோக செல்வாக்கும், ஆதரவும் பெருகி உள்ளது. இது ஒட்டு மொத்த தமிழகத்தில் 93 சதவீத வெற்றியாகும். எதிர்கட்சிகளை வேரோடு சாய்த்துவிட்டது போன்ற வெற்றியை பெற்றுள்ளது.
மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 17 தொகுதியில் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.
நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், கன்னியாகுமரி, விளவங்கோடு, சிங்காநல்லூர், கோவை தெற்கு ஆகிய 7 தொகுதிகளில் பா.ஜனதா அதிக ஓட்டுகள் பெற்றுள்ளது.
தி.மு.க.வுக்கு பாளையங்கோட்டை, திருவாரூர், ஆத்தூர் (திண்டுக்கல்) கூடலூர் (தனி) ஆகிய 4 தொகுதிகளிலும், பா.ம.க.வுக்கு பாப்பிரெட்டிபட்டி, தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு ஆகிய 4 தொகுதிகளிலும் அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன.
தி.மு.க.வுக்கு 4 சட்டசபை தொகுதியில் அதிக ஓட்டு கிடைத்தாலும் ஒரு எம்.பி. தொகுதி கூட கிடைக்கவில்லை. அதே சமயம் பா.ம.க. 4 சட்டசபை தொகுதியில் கிடைத்த ஓட்டு மூலம் ஒரு தொகுதியை கைப்பற்றியுள்ளது.
வடசென்னை தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் 59,637 ஓட்டுகள் பெற்றுள்ளார். தி.மு.க. வேட்பாளர் கிரிராஜன் 59,422 வாக்குகள் பெற்று இருக்கிறார்.
இதேபோல் மத்திய சென்னைக்குட்பட்ட துறைமுகம் சட்டசபையில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் 35,385 ஓட்டுகள் பெற்றுள்ளார். தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன் 34,661 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.
சேப்பாக்கம் தொகுதியில் விஜயகுமாருக்கு 56,526 வாக்குகளும், தயாநிதிமாறனுக்கு 56,062 வாக்குகளும் கிடைத்துள்ளன. சென்னையில் இந்த 3 சட்டமன்ற தொகுதிகளில்தான் அ.தி.மு.க.வுக்கு வாக்கு வித்தியாசம் குறைவு மற்ற தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் அதிகம் பெற்றுள்ளது.
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் பா.ஜனதாவின் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 60,439 ஓட்டுகளும், அ.தி.மு.க.வின் நாகராஜனுக்கு 54,102 ஓட்டுகளும் கிடைத்துள்ளன. ஆனால் மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க. அதிக ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள் ளது.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தனது சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட காட்டுமன்னார் கோவிலில் மட்டுமே அ.தி.மு.க.வை விட அதிக ஓட்டு பெற்றுள்ளார். திருமாவளவனுக்கு 58,294 ஓட்டுகளும், அ.தி.மு.க.வின் சந்திரகாசிக்கு 49,604 வாக்குகளும் கிடைத்துள்ளது.
கன்னியாகுமரியின் கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், பா.ஜனதாவின் பொன்.ராதாகிருஷ்ணனை விட அதிக ஓட்டுகள் பெற்றுள்ளார். இங்கு வசந்தகுமாருக்கு 52,095 ஓட்டுகள் கிடைத்துள்ள நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் 49,239 வாக்குகளே பெற்று 2–வது இடத்தில் உள்ளார்.
அ.தி.மு.க. அரசு தனது 3–வது ஆண்டு சாதனையை கொண்டாடும் இந்த நேரத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பரிசாக இந்த வெற்றியை அளித்துள்ளனர்.
இந்த வெற்றி 2016 சட்டசபை தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.

ad

ad