புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2014


அதிகாரப் பிடியில் இருந்து சிறுபான்மை மக்களை விடுவிக்கவும்: சுஷ்மாவிடம் ஜோன் கெரி கோரிக்கை
இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப் பிடியில் இருந்து சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக பதவி ஏற்றுள்ள சுஷ்மா சுவராஜை தொடர்பு கொண்ட அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இதனைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சுஷ்மாவின் புதிய பதவிக்கு வாழ்த்தினை தெரிவித்த ஜோன் கெரி, இலங்கையில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளில் இந்தியா அவதானம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கருத்து கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீண்டகாலமாக தொடரும் இந்த பிரச்சினைக்கு, இந்த ஆட்சியிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜோன் கெரி வலியுறுத்தியதாகவும் ஆங்கில இணைத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

ad

ad