புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2014


மன்னார் குருவில்வான் கிராம மக்களை வெளியேற வனவள ஜீவராசிகள் திணைக்களம் உத்தரவு 
மன்னார், மாந்தை மேற்கு பிர­தேச செய­லாளர் பிரிவிற்குட்­பட்ட குரு­வில்வான் கிரா­மத்தில் நீண்­ட­கா­ல­மாக வசித்து வரு­கின்ற குடி­யி­ருப்­பா­ளர்­களை முன் அறி­வித்தல் எது­
வு­மின்றி உடனே வெளி­யே­றும்­படி வன­வள ஜீவ­ரா­சிகள் திணைக்­க­ளத்­தினால் அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.
 
 
இதை­யிட்டு இந்தக் கிராம மக்கள் அதிர்ச்­சியும் கவ­லையும் கொண்­டுள்­ள­துடன் இது­வி­ட­ய­மாக சில முக்­கி­யஸ்­தர்­களின் கவ­னத்­துக்கும் கொண்டு சென்று இப் பிரச்­சி­னைக்­கான நிவார­ணமும் வேண்டி நிற்­கின்­றனர்.
 
இது­பற்றி தெரி­ய­வ­ரு­வ­தா­வது:
 
காணி­அ­ப­க­ரிப்பின் ஒரு அங்­க­மாக மன்னார் மாந்தை மேற்கு பிர­தேச செய­லாளர் பிரிவிற்குட்­ப
ட்ட குரு­வில்வான் கிரா­மத்தில் நீண்­ட­கா­ல­மாக வசித்து வந்த குடி­யி­ருப்­பா­ளர்­களை முன் அறி­வித்தல் எது­வு­மின்றி உடனே வெளி­
யே­றும்­படி வன­வள ஜீவ­ரா­சிகள் திணைக்­க­ளத்­தினால் அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்
ளது.
இவ் அறி­வித்­தலை தொடர்ந்து குறித்த பகுதியில் வாழ்ந்­து­வரும் 14 குடும்­பங்­களை சேர்ந்த குடி­யி­ருப்­பா­ளர்கள் கவ­லை­ய­டைந்­துள்­ளனர். அத்­துடன் பெரும் அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.
 
இந்த விடயம் மன்னார் பிர­ஜைகள் குழுவின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து மன்னார் பிர­ஜைகள் குழுவின் உப­த­லைவர் எஸ்.சகாயம் தலை­மை­யி­லான குழு இசமூ­க­சே­வகர் சாள்ஸ் நிம­ல­நாதன் மற்றும் மன்னார் பிர­தேச சபையின் தவி­சாளர் மார்டீன் டயஸ் ஆகியோர் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை குறித்த பகு­திக்கு சென்று பிரச்­சி­னைகள் தொடர்­பாக ஆராய்ந்­தனர்.
 
42 வரு­டங்­க­ளுக்கு மேலாக வசித்து வரும் மக்­க­ளா­கிய எங்­களை எது­வித முன் அறி­வித்­த­லு­மின்றி உடனே வெளி­யே­றும்படி வன­வள ஜீவ­ரா­சிகள் திணைக்­க­ளத்­தினால் அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது என கவ­லை­யுடன் அந்த மக்கள் அங்கு சென்ற குழு­வி­ன­ரிடம் தெரி­வித்­தனர்.
 
குறித்த குரு­வில்வான் கிராமம் செழிப்­பு­மிக்க மண் என்­ப­தாலும் இங்கு பல தொழில்­களை செய்­வ­தற்கு ஏற்ற இட­மாக உள்­ளதால் குறித்த பகு­தியில் உள்ள தமிழ் மக்­களை அகற்­றி­விட்டு இப்­ப­கு­தியில் சிங்­கள குடி­யேற்­றங்­களை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொள்ளப் போவ­தாக மக்கள் அச்­ச­ம­டைந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.அதற்­கான நட­வ­டிக்­கை­களை இரா­ணுவம் இப்­ப­கு­தியில் மேற்­கொண்டு வரு­வ­தாக மக்கள் தெரி­விக்­கின்­றனர்.
 
குறிப்­பாக இப்­ப­கு­தியில் வசித்து வரும் மக்­களின் வீடு­களின் முன் அமைந்­துள்ள நுழை­வா­யில் பகுதி உட்­பட பல இடங்­களில் இது இரா­ணு­வத்­திற்கு சொந்­த­மான இடம் என எழுதப்பட்ட வாச­கங்கள் அடங்­கிய பல­கைகள் இரா­ணு­வத்­தி­னரால் போடப்­பட்­டுள்­ள­தோடு அவர்களை குறித்த காணி­களை விட்டு விலகி­ச்செல்­லு­மாறு அச்­சு­றுத்தி வரு­வதோடு காணி­களை அப­க­ரிக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ள­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கி­றது.
 
இது குறித்து மக்கள் தெரி­விக்­கையில்,
 
எமது மூதா­தை­யர்கள் வாழ்ந்து வந்த மண்­ணி­லேயே நாம் வாழ்ந்து வரு­கின்றோம் இரா­ணு­வமோ அல்­லது வன­வள ஜீவ­ரா­சிகள் திணைக்­க­ளமோ எம்மை எமது பூர்­வீக காணி­யி­லிருந்து அகற்ற முடி­யாது. இப்­ப­கு­தியை விட்டு நாம் ஒரு­போதும் வெளி­யேறப் போவ­தில்லை எனவும் தெரி­வித்­தனர்.
 
இந்­நி­லையில் மக்­களின் கருத்துகளை கேட்டு அறிந்து கொண்ட பிஜைகள் குழுவின் அங்கத்தவர்கள் குறித்த பகுதியைசுற்றி பார்வையிட்டதுடன் இந்த மக்களின் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகுவதற்கு தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதற்கு மன்னார் பிரஜைகள் குழு ஆலோசனையினை மக்களுக்கு வழங்கியுள்ளதோடு நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

ad

ad