திங்கள், மே 26, 2014

மீண்டும் உருப்பெறும் மோசடி விசாரணைக்குழு
மோசடிகள் தொடர்பான விசாரணை குழுவை மீண்டும் நியமிக்க இலங்கை  கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.

 
இதன்படி, ஆர்.ஜே.டி.சில்வாவின் தலைமையிலான மோசடிகளுக்கு எதிரான குழு நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட்டின் நிறைவேற்றுக் குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
 
முன்னாள் கிரிக்கட் வீரர்களான அனுர தென்னகோன் மற்றும் ஜயந்த பரணாதல ஆகியோ இந்த குழுவில் அடங்கும் ஏனைய இரண்டு உறுப்பினர்களாவர்.