புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2014


இலங்கையில் இயங்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஐ.நா நிபுணர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் வெற்றிடமாகியிருக்கும் ஐ.நா. சுயாதீன நிபுணர் பதவி ஒன்றுக்கே அவர் விண்ணப்பித்துள்ளதாக மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் வருகின்ற “சட்டமுறையற்ற விதத்திலான தடுத்து வைப்புத் தொடர்பான செயலணிக் குழு”வின் ஆசிய - பசுபிக் பிராந்திய நாடுகளின் அங்கத்தவராக இடம்பெறும் பதவிக்கு பத்துப் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில் பாக்கியசோதி சரவணமுத்துவும் ஒருவர் என ஆணையாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் பாக்கியசோதி சரவணமுத்து கருத்து தெரிவிக்கையில்,
ஐ.நாவின் சிறப்புக் கொள்கைகள் சிறப்புப் பொறுப்பினைக் கொண்டுள்ளது. ஐ.நாவின் சிறப்பு உள் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு சிறப்புப் பொறுப்பினையும் ஏற்றுக் கொள்ள சம்மதிக்க வேண்டும்.
அதேபோல் தீவிரவாத எதிர்ப்புச் சக்திகளுக்காக முழுமையாக போராட தம்மை அர்ப்பணித்து கொள்ள வேண்டும். மனித வள சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு செலவிட வேண்டும்.
மக்களது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தினையும் போற்றி பாதுகாக்க வேண்டுமே தவிர, அடக்குமுறைகளைக் கையாளுதல் மனித உரிமைகளை மீறுதல்களுக்க ஒத்தாகும்.
கட்டாயத்தின் பேரில் பன்னாட்டு மனித உரிமைகளை மீறி, அடக்குமுறைகளை கையாண்டு வருவது ஐ.நா சபையின் அடிப்படைக் கொள்கைகளையே அவமதிப்பதற்கு சமமானதாகும் என்றார்.
மேலும், பாக்கிய சோதி சரவண முத்து கூறுகையில், தான் ஐநாவின் மனித உரிமைக்கழகத்தின் பொறுப்புக்களையம், சிறப்பு செயன்முறைகளையும் முழுவதுமாக நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகளை உலக நாட்டு மக்கள் உல்லோரும் பெற்றுவாழ வழிசெய்வதே இதன் நோக்கம் இதன் மூலம் பன்னாட்டு உறவினையும் மனித உரிமைகள் பாதுகாப்பினையும், மேம்படுத்த முடியும் என்று முன்நோக்குக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ad

ad