புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014

கரப்பந்தாட்டத்தில் சம்பியனானது கரவெட்டிப் பிரதேச இளைஞர்கழகம்
யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தால் யாழ். மாவட்ட பிரதேச இளைஞர் சேவைகள் மன்றங்களுக்கு இடையே நடத்தப்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்டச்
 சுற்றுப்போட்டித் தொடரில் கரவெட்டி பிரதேச இளைஞர் கழகஅணி வெற்றி பெற்றுச் சம்பியனாகியது.
 
ஆவரங்கால் நடராசா இராமலிங்கம் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் கோப்பாய் பிரதேச இளைஞர்கழக அணியும், கரவெட்டி பிரதேச இளைஞர் கழக அணியும் மோதிக் கொண்டன.
 
ஐந்து சுற்றுக்களைக் கொண்ட இந்தப் போட்டியில் கரவெட்டி பிரதேச இளைஞர் கழக அணி 25:23, 25:22 என்ற புள்ளிகள்  அடிப்படையில் முதல்  இரண்டு  சுற்றுக்களையும வெற்றி கொண்டது. மூன்றாவது சுற்றை கோப்பாய் இளைஞர் கழக அணி 25 : 19  என்ற புள்ளிகள்  அடிப்படையில் வெற்றி பெற்றது.
 
நான்காவது சுற்றை கரவெட்டி பிரதேச இளைஞர் கழக அணி 25:21  என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி கொள்ள கரவெட்டி பிரதேச இளைஞர் கழக அணி 3:1 என்ற சுற்றுக்கள் கணக்கில் கோப்பாய் பிரதேச இளைஞர்கழக அணியை வென்று மாவட்டச் சம்பியனாக தெரிவானது.

ad

ad