புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2014

கொன்சலிற்றா வழக்கு; யூலை 10 வரை ஒத்திவைப்பு 
news
கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெறோம் கொன்சலிற்றா தொடர்பான வழக்கு விசாரணையை யூலை 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


குருநகர் பெரிய கோயிலுக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா  தொடர்பிலான வழக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி பி.சிவகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது வழக்கினை விசாரணை செய்த நீதவான் மீண்டும் வழக்கினை எதிர்வரும் 10 திகதிக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார்.

இன்றைய விசாரணையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பாரிய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மன்றில் சாட்சியமளித்திருந்தார்.

மேலும் கொன்சலிற்றா சார்பில் சட்டத்தரணிகளாக சர்மினி விக்கினேஸ்வரன் , கணாதீபன், அர்ச்சுனா ஆகியோர் ஆஜராகியிருந்தனர். பாதிரிமார் சார்பில் அன்ரன் புனிதநாயகம், மு.ரெமீடியஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி பெரியகோயிலுக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஜெரோம் கொன்சலிற்றா சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்ததக்கது.

ad

ad