புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014


கூடங்குளம் முதலாவது அணு உலையில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி!
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி 1000 மெகா வாட்டை எட்டியுள்ளதாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார். 


இன்று 1.20 மணிக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலை முழு கொள்ளவான 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது.  அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் சில சோதனைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி நடைபெறும் என்று இயக்குநர் சுந்தர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதி முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. அந்த அணு உலையில் தொடக்கத்தில் 63 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது மின் உற்பத்தி இலக்கை எட்டப்பட்டுள்ளது.
கடந்த 5-ம் தேதி கூடங்குளம் அணுஉலையில் உற்பத்தித் திறன் 90 சதவீதத்தை எட்டிய போது, ஒரு வார காலத்திற்குள் முழு உற்பதித் திறனை எட்டும் என எதிர்பார்த்தோம். அணுஉலை உற்பத்தித் திறன் 900 மெகாவாட் எட்டிய போது அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் உற்பத்தி குறித்த அறிக்கையை அளித்து அடுத்த கட்டத்திற்கான அனுமதியை பெற சற்று கால அவகாசம் தேவைப்பட்டது என்று சுந்தர் தெரிவித்துள்ளார். 
மற்ற மின் உற்பத்தி செய்யும் உலைகளை எடுத்துக் கொண்டால் 540 மெகாவாட் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதேபோன்று அணல்மின் நிலயங்களை எடுத்துக் கொண்டால் 660 மற்றும் 680 மெகாவாட் வரையில் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். 770 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் மற்றொரு அணுஉலையின் கட்டுமாண பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் நாட்டில் முதலாவது அணு உலையாக கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார். கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

ad

ad