புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2014

பார்த்தீனியம் ஒழிப்பு; 10 ஆயிரம் கிலோ இதுவரை எரித்தழிப்பு 
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வடமாகாணத்தில்  பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை அதீத வெற்றியை பெற்றுள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கை கடந்த வாரம்  ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி பார்த்தீனியம் விலைக்கு பெறப்பட்டு எரித்தழிக்கும் நடவடிக்கை வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 10,000 கிலோ கிராம் பார்த்தீனியம் பெறப்பட்டு அழிக்கப்பட்டது. இதனடிப்படையில் பார்த்தீனியம் ஒழிப்பு வெற்றியும் கண்டுள்ளது. எனவே எதிர்வரும் வாரமும் தொடர்ந்தும் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த வாரம் 37பேர் பார்த்தீனியத்தை விற்பனை செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் 500 கிலோ கிராமுக்கு மேற்பட்ட பார்த்தீனியத்தை .விற்பனை செய்துள்ளனர். அதன்படி அவர்களை ஊக்குவிக்கும் முகமாக பரிசுப் பொருட்களும், அவர்களுக்கான பணமும்  வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்வுகள் ஏ9 வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.









ad

ad