புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2014


மதுரை தமிழ்ச்சங்கத்துக்கு வலைதளம்: ஜெ., தொடங்கி வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கென தனி அலுவலர் அலுவலகம் தோற்றுவிக்கப்பட்டதோடு, துணை விதிகள் உருவாக்கப்பட்டு,
தமிழ்நாடு சங்கப் பதிவு சட்டத்தின் கீழ் மதுரையில் 13.12.2012 நாளன்று பதிவு செய்யப்பட்டது.


உலகத் தமிழ்ச் சங்கத்தை சிறப்புடன் நிருவகிக்க தனி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உலகத் தமிழ்ச் சங்கப் பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு பெருந்திட்ட வளாகம் கட்ட 25 கோடி ரூபாயும், ஊதியம் மற்றும் திட்டப் பணிகளுக்கென மானியமாக இதுவரை 1 கோடியே 43 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, உலகத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றிடவும், உலகத் தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளை உலகத்தில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும் 4 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கென www.ulagatamilsangam.org என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள வலைதளத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இந்த வலைதளத்தில், உலகத் தமிழ்ச் சங்கத் துணை விதிகள்; உலகத் தமிழ்ச் சங்கத் திட்டங்கள்; ஜெயலலிதாவின் அமுத மொழிகள் மற்றும்  ஜெயலலிதா தலைமையிலான அரசின் தமிழ் வளர்ச்சி குறித்த சாதனைகள்; இதுவரை நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகள் குறித்த விவரங்கள்; சங்கத் தமிழ் நிகழ்வுகள்; பழந்தமிழ்ச் சங்கங்கள் பற்றிய குறிப்புகள்; பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள உலகத் தமிழ் அமைப்புகள்; இந்தியாவில் உள்ள வெளிமாநிலத் தமிழ் அமைப்புகள்; தமிழ் வளர்ச்சித் துறை வலைதள இணைப்பு வசதி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மேலும், உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள, “உலகத் தமிழ் அமைப்புகள்” என்ற நூலையும், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “அம்மாவின் ஆட்சியில் தமிழ் வளர்ச்சி”, “அம்மாவின் தமிழ்ச் சிந்தனைகள்” மற்றும் “சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு மலர் 2014” ஆகிய நூல்களையும் “அம்மாவின் சாதனைகள்” என்ற சேர்ந்திசைப் பாடல்கள் குறுந்தகட்டையும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளரிடம் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், (ஓய்வு), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம், உலகத் தமிழ்ச் சங்கத்தின் தனி அலுவலர் (பொறுப்பு) முனைவர் க. பசும்பொன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்’’என்று கூறப்பட்டுள்ளது.

ad

ad