புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2014


காங்கிரஸின் வலுவற்ற ஆட்சியால் இலங்கை சீனாவிடம் நெருங்கியது: சுப்ரமணியம் சுவாமி
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்த வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை துரிதமான அமுல்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்ற சொல்லுக்கு அமைய 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்கள் மறந்து போகும் எனவும் சுப்ரமணியம் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமையை பாராட்ட வேண்டும். ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றி இலங்கை தமிழர்களின் பிரச்சினை காரணமாக கிடைத்த வெற்றியல்ல.
திமுகவின் பல்வேறு ஊழல் மோசடிகள் காரணமாக மக்கள் அந்த கட்சியின் மீது வைத்திருந்த நம்பிக்கையை திமுக இழந்தது. இதன் காரணமாகவே ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் வைகோ தனது சொந்த பகுதியில் தோற்று போனார்.
சினிமா துறையில் இருக்கும் நபர்கள் அரசியலுக்கு வருகின்றனர். அவர்களில் பலருக்கு புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் பணத்தை வழங்கி வருகின்றனர்.
அதேவேளை காங்கிரஸ் கட்சியின் வலுவற்ற ஆட்சி நிர்வாகம் காரணமாக இலங்கை சீனாவை நோக்கி நெருங்கியுள்ளது.
வெளிநாட்டு கொள்கைகளில் மாற்றங்களை செய்வதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என நான் நம்புகிறேன்.
இலங்கை அரசாங்கம் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையான அமுல்படுத்தி காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். 
முன்னாள் இந்திய மத்திய அமைச்சரும் பொருளாதார நிபுணருமான சுப்ரமணியம் சுவாமி, விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்த்து வரும் நபர்களில் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad