புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2014

யாழில் கடந்த வாரம் 162 பேர் பொலிஸாரினால் கைது 
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின்  விசேட நடவடிக்கையில் 162 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றிலும் முற்படுத்தப்பட்டுள்ளனர்
என யாழ். மாவட்ட சிரேஸ்ட  பொலிஸ்  அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார்.
 
யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
 
 
அவர் மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணம் பொலிஸ் பகுதியில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்குடன் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளில் 162 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
அதன்படி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 5 பேரும், அடித்து காயப்படுத்தியமை தொடர்பில் 10 பேரும்,  சந்தேகத்தில் 58 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 22 பேரும், வாகன விபத்து தொடர்பில் 3 பேரும்,  குடித்து விட்டு கலகம் விளைவித்த 3 பேரும், களவு தொடர்பில் 10 பேரும், சட்டவிரோத மது விற்பனை தொடர்பில் 27 பேரும், கொலை செய்து களவு செய்தமை தொடர்பில், கொள்ளையடித்த ஒருவரும், வீட்டினுள் அத்துமீறி உள் நுழைந்தமை தொடர்பில் ஒருவரும், போது இடத்தில் மது அருந்தியமை தொடர்பி 10 பேரும், கத்தியால் வெட்டியமை தொடர்பில் 5 பேரும், சட்டவிரோத மின் இணைப்பு பெற்றமை தொடர்பில் ஒருவரும், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய இருவருமாக மொத்தம் 162 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ad

ad