புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2014


ஈராக் போர் பகுதியில் இருந்து 17 இந்தியர்கள் மீட்பு: 120 பேர் சிக்கியிருப்பதாக வெளியுறவுத்துறை தகவல்
ஈராக் போர் பகுதியில் இருந்து 17 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 120 இந்தியர்கள் சிக்கியிருப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


டெல்லியில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பரூதின், 
ஈராக்கில் சிக்கியுள்ள 46 நர்சுகள் பத்திரமாக உள்ளனர். அவர்களுடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். ஈராக்கில் உள்ள இந்தியர்களிடம் இருந்து கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றோம். தனி நபரிடம், நிறுவனங்களிடம் இருந்தும் கோரிக்கைகளை வந்துள்ளன. அந்நிறுவனங்களை தொடர்பு கொண்டு இந்தியா திரும்ப விரும்புபவர்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டோம். அதன்படி 28 இந்தியர்கள் திரும்பியுள்ளனர் என்றார். 
ஈராக்கில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது குறித்த கேள்விக்கு, இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றார்.

ad

ad