புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2014

டூனா மாநாடு கொழும்பில் நாளை ஆரம்பம் 
இந்து சமுத்திர டூனா ஆணையத்தின் 18 வது மாநாடு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
 
35 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 250 உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
 
குறிப்பாக இந்து சமுத்திரத்தில் காணப்படும் சூரை மீன் வளத்தை பாதுகாப்பது தொடர்பிலும், இந்து சமுத்திர கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுதல், அனுமதிபத்திரமின்றி கடற்றொழிலில்  ஈடுபடுகின்றமை போன்ற பல காரணிகள் தொடர்பில் மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.
 
இலங்கைபை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம் மற்றும் நாரா நிறுவன அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

ad

ad