வியாழன், ஜூன் 26, 2014


வன்முறை சேதங்களை புனரமைக்க 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு
அளுத்கமை மற்றும் தர்கா நகர்களில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சேதங்களை புனர்அமைக்க 200 மில்லியன் ரூபாய்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்க அமைச்சர் குணரத்ன வீரக்கோன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 
களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வன்முறைகளின் போது பேருவளை, களுத்துறை, பெந்தோட்டை அளுத்கம போன்ற இடங்களில் கட்டிடங்களுக்கு சேதங்கள் விளைவிக்கப்பட்டன.
இதனை படையினர் திருத்தியமைப்பார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.