புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2014


24½ கோடியில் விளையாட்டு வசதிக்கு கட்டிடங்கள்: ஜெ., திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் 6246 சதுர அடி பரப்பளவில் மூன்று இறகுப்பந்து மைதானங்கள், ஒளிரும்
மின்விளக்கு வசதிகள், பார்வையாளர்கள் அரங்கம், நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட வசதிகளுடன் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டரங்கத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.


வேளச்சேரி நீச்சல்குள வளாகத்தில் 7405 சதுர அடி பரப்பளவில் நான்கு இறகுப்பந்து மைதானங்கள், ஒளிரும் மின்விளக்கு வசதிகள், பார்வையாளர்கள் அரங்கம், நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட வசதிகளுடன் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டரங்கம்;
திருவள்ளூர் மாவட்டத்தில் 6068 சதுர அடி பரப்பளவில் 400 மீட்டர் ஓடுகள பாதை, கால்பந்து மைதானம், கைப்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம், பளுதூக்கும் கூடம், நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட வசதிகளுடன் 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி விளையாட்டரங்கம்;
தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் 5500 சதுர அடி பரப்பளவில் 60 மாணவர்கள் தங்கும் விடுதி, சமையற்கூடம், உணவுக் கூடம் மற்றும் ஓய்வு அறை உள்ளிட்ட வசதிகளுடன் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு விடுதி; என 4 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விடுதி ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 1 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மூன்று இறகுப்பந்து மைதானங்கள்; சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கின் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஸ்குவாஷ் உள் விளையாட்டரங்க மைதானம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக நீர் சிகிச்சை நீச்சல் குளம், இரண்டு கூடைப்பந்து மைதானங்கள், இரண்டு கைப்பந்து மைதானங்கள்; காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்பயிற்சி கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் 6 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட்டாலான ஏற்ற, இறக்க சைக்கிள் ஓடுபாதை;என 19 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டிலான விளையாட்டு கட்டமைப்புகளுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி னார்.
மொத்தத்தில், 24 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு வசதிகளுக்கான கட்டடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி திறந்து வைத்தார்.
2009ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 2வது ஆசிய ஜூனியர் கபடி போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எம்.பியாரவிற்கு சிறப்பு ஊக்கத்தொகையாக 5 லட்சம் ரூபாய்;2010ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற 2-வது உலகக் கோப்பை வலையப்பந்து (டென்னி காய்ட்) போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஜி.நாராயண சூர்யா-விற்கு சிறப்பு ஊக்கத் தொகையாக 10 லட்சம் ரூபாய்;2010ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சக்கர நாற்காலி வாள்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.நூருதீனுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக 10 லட்சம் ரூபாய்;
2010ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற 19-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சீனாவில் நடைபெற்ற 16-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களின் பயிற்றுநர்கள் முகமது ரியாஸ் (தடகளம்), சையத் அலி உசைனி (வில் வித்தை), எ.முரளிதரராவ் மற்றும் எ.சீனிவாராவ் (மேசைப்பந்து), எஸ்.ராமன் (மேசைப்பந்து), நகம் பிரசாத் (மேசைப்பந்து), கிறிஸ்டோபர் எ.அனஸ் (மேசைப்பந்து), மற்றும் கே.விஷ்வேஸ்வரன் (சதுரங்கம்) ஆகிய 8 பயிற்றுநர்களுக்கு ஊக்கத் தொகையாக 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்;
என மொத்தம் 41 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையினை 3 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் 8 பயிற்றுநர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், (ஓய்வு), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசீமுத்தின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மைச் செயலர்–உறுப்பினர் செயலர் வி.கு.ஜெயக்கொடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad