புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2014


ராமேசுவரம் மீனவர்கள் 33 பேர் விடுதலை: இன்று மாலை வருகிறார்கள்

இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 33 ராமேசுவரம் மீனவர்களும், இன்று மாலை மண்டபம் வருகின்றனர்.

45 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து, கடந்த 1–ம் தேதி ராமேசுவரம் மீனவர்கள் 770 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மேலும் ராமேசுவரத்தை சேர்ந்த குழந்தைசாமி, செந்தூரான், கண்ணன், பால்பாண்டி உள்பட 7 பேருக்கு சொந்தமான படகுகளையும் அவற்றில் இருந்த சுடலைமணி, அந்தோணி, அமீர், ஆறுமுகம், கண்ணன், லெட்சுமணன், கெவின், தபாஸ் உள்பட 33 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
கைதானவர்கள் மீது எல்லை தாண்டி வந்த சந்தேக நபர்கள் கடல் வளங்களை அழிக்கும் தடை செய்யப்பட்டு வலைகளை பயன்படுத்தியது, கடல் வளங்களை திருடி செல்ல முயன்றது என 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் 29 பேர் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள 4 மீனவர்கள் மன்னார் மீன்துறை அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நல்லெண்ண அடிப்படையில் 33 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்ட 29 மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது 6 படகுகள் விடுவிக்கப்படவில்லை. விசாரணையில் இருந்த 4 மீனவர்களும் படகுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட 33 மீனவர்களும், இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு இந்திய கடல் எல்லையில், இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இன்று மாலை 3 மணிக்கு மேல் மண்டபம், கடலோர காவல்படை முகாமிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய–இலங்கை நிரபராதி மீனவர்கள் கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் தெரிவித்தார்.

ad

ad