புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2014


திமுக ஒழுங்கு நடவடிக்கை :
மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் 33 பேர் நீக்கம்
 
 


 
திமுக தலைமைக் கழகம் சார்பில், கழக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள
அறிவிப்பு:

’’நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும், மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களும் தேர்தலில் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தர வேண்டுமென்று கழகத் தலைமையினால் கேட்டுக் கொள்ளப்பட்டு - அவர்கள் தந்த அறிக்கைகளையும், மற்றும் கழக உறுப்பினர்கள் தந்த புகார் கடிதங்களையும் படித்தறிந்து, தவறு செய்தவர்கள் பற்றிய விவரங்களைக் கழகத் தலைமைக்கு பரிந்துரைக்க வேண்டுமென்று கூறப்பட்டதின் அடிப்படையில் - குழுவின் உறுப்பினர்களாக தலைமைக் கழகத்தினால் நியமிக்கப்பட்ட கலசப்பாக்கம் திருவேங்கடம், தங்கம் தென்னரசு ஆகிய இருவரும் கழகத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்துக் கடிதங்களையும் நன்றாக படித்தறிந்து தவறு செய்தவர்கள், கழகச் சட்டதிட்டத்திற்கு மாறாக நடந்து கொண்டவர்கள் யார் யார் என்று விவரமாகத் தந்துள்ள பரிந்துரைகளின்படி; திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதி 37 பிரிவு 4இன் படி, பின்வரும் பட்டியலிலே கண்டுள்ளவர்கள் தாங்கள் தற்போது வகிக்கும் பொறுப்புகள் அனைத்திலிருந்தும் தற்காலிகமாக விலக்கி வைக்கப் படுவதோடு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து முழுவதுமாக ஏன் நீக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தை விதி 37, பிரிவு 7இன்படி ஒரு வாரக் காலத் தவணைக்குள் கழகத் தலைமைக்குத் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். குறிப்பிட்ட ஒரு வாரக் காலத்திற்குள், அவர்கள் விளக்கம் தரத் தவறுவார்களானால், அவர்களிடம் விளக்கமளிக்க எதுவும் ஆதாரமில்லை என்று கருதப்பட்டு நேரடியாக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைஎடுத்து, கழகத்திலிருந்து முழுவதுமாக நீக்கப் படுவார்கள்.

ஒழுங்கு நடவடிக்கைக்கு உரியவர்கள்.

1.  எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாவட்டக் கழகச் செயலாளர், தஞ்சை மாவட்டம். 

2.  வ. முல்லைவேந்தன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி தெற்கு மாவட்டம். 

3. பெ. இன்பசேகரன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி வடக்கு மாவட்டம். 

4.  சிட்டி முருகேசன், நகரக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி 

5.  சுந்தரம், நகரக் கழகச் செயலாளர், கவுண்டம்பாளையம், கோவை மாவட்டம். 

6.  தென்றல் செல்வராஜ், நகரக் கழகச் செயலாளர், பொள்ளாச்சி, கோவை மாவட்டம். 
7.  மகாராஜன், நகரக் கழகச் செயலாளர், துறையூர், திருச்சி மாவட்டம். 
8.  சீனி அண்ணாதுரை, நகரக் கழகச் செயலாளர், பட்டுக்கோட்டை, தஞ்சை 
மாவட்டம். 
 
9.  இராஜ பூபாலன், நகரக் கழகச் செயலாளர், மன்னார்குடி 

10. முத்துக்குமாரசாமி, பேரூர் கழகச் செயலாளர், நத்தம், திண்டுக்கல் மாவட்டம். 


11 ரவிச்சந்திரன், நங்கவள்ளி ஒன்றியக் கழகச் செயலாளர், 

12.  பாப்பாரப்பட்டி சுரேஷ்குமார், பனமரத்துப்பட்டி ஒன்றியக் கழகச் செயலாளர்,. 

13.  ஓமலுhர் பரமன், ஓமலுhர் ஒன்றியக் கழகச் செயலாளர் 

14.  கே. பொன்னுச்சாமி, மொரப்பூர் ஒன்றியக் கழகச் செயலாளர். 

15.  ஆர். காசிவிசுவநாதன் மேச்சேரி ஒன்றியக் கழகச் செயலாளர். 

16.  க. கார்த்திகேயன், தியாகதுர்க்கம் ஒன்றியக் கழகச் செயலாளர். 

17. தீ. சக்திவேல், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர். 

18.  பி. கணேசன், நாமக்கல் ஒன்றியக் கழகச் செயலாளர். 

19.  டி.பி. சுப்பிரமணியம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர். 

20.  இராஜமாணிக்கம், குடிமங்கலம் ஒன்றியக் கழகச் செயலாளர். 

21.  கோழிக்கடை கணேசன், வால்பாறை ஒன்றியக் கழகச் செயலாளர். 

22. ஆனந்தன், மண்ணச்சநல்லுhர் ஒன்றியக் கழகச் செயலாளர். 

23. சோழன், முசிறி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர். 

24.  ஜெயபால், கடலுhர் ஒன்றியக் கழகச் செயலாளர். 

25.  ஏனாதி பாலு, பட்டுக்கோட்டை ஒன்றியக் கழகச் செயலாளர். 

26.  தியாக இளங்கோ, ஒரத்தநாடு ஒன்றியக் கழகச் செயலாளர். 
 
27. மாரியப்பன், பழனி ஒன்றியக் கழகச் செயலாளர். 


28.  ஓ. ராஜேந்திரன், வத்தலக்குண்டு ஒன்றியக் கழகச் செயலாளர். 

29.  சின்ராஜ், விருதுநகர் ஒன்றியக் கழகச் செயலாளர். 

30.  இராஜசேகர், கடலாடி ஒன்றியக் கழகச் செயலாளர். 

31.  கனகு (எ) கனகராஜ், மண்டபம் ஒன்றியக் கழகப் பொறுப்பாளர். 

32.  கே.பி. இராமலிங்கம், எம்.பி., மாநில விவசாய அணிச் செயலாளர். 

33.  எஸ்.எம். போஸ், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர், விருதுநகர். ‘’
 

ad

ad