புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2014


அடிப்படைவாத மோதல்களின் பின்னணியில் 4 அமைச்சர்களும் கோத்தபாயவும் - அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
நாட்டில் நடக்கும் சகல அடிப்படைவாத மோதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் 4 அமைச்சர்கள் மற்றும் ஒரு அமைச்சின் செயலாளர் இருப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான நஜீத் இந்திக இதனை கூறியுள்ளார்.
அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ, சம்பி
க்க ரணவக்க, றிசாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் வழிநடத்தி வரும் அமைப்புகள் நாட்டில் அவ்வப்போது மோதல்களை ஏற்படுத்தி வருகின்றன.
ஆட்சியாளர்களின் மூழ்கி வரும் அரசியல் அதிகாரத்தை தற்காத்து கொள்ளும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள் பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தும் போது அதற்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவுகளை பெறும் ஆட்சியாளர்கள், மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படும் என்பதை அறிந்தும் அடிப்படைவாத கருத்துக்களை தெரிவிக்கும் கூட்டங்களை நடத்த இடமளிப்பதாகவும் நஜீத் இந்திக குறிப்பிட்டுள்ளார்.

ad

ad