புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2014

அளுத்கம வன்செயல் எண்மர் பலி, 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு - மொஹமட் அஸ்லம் எம்.பி தகவல் 
அளுத்கமையில் இடம் பெற்ற சம்பவங்களினால்  இதுவரை எண்மர் உயிரிழந்துள்ளதுடன் 170 பேர் காயமடைந்துள்ளனர்.  370 குடும்பங்களை சேர்ந்த  2450 பேர் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. மொஹமட் அஸ்லம் தகவல் வெளியிட்டுள்ளார்.
 
மேலும், 150 வீடுகள் கடைகள் மற்றும் 17 பள்ளிவாசல்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் 580 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு அழிவு ஏற்பட்டுள்ளதாக மொஹமட் அஸ்லம் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் வைத்து தகவல் வெளியிட்டுள்ளதுடன் இந்த அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் அரசாங்கம் நட்ட ஈட்டினை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அஸ்லம் எம்.பி.இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
 
அளுத்கமையில் இடம் பெற்ற சம்பவம் ஆனது கண்டனத்துக்கு உரியதாகும். சமாதானத்தை பாதுகாக்கும் பொலிஸார் உரிய வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தார்களேயானால் இத்தகைய அழிவுகளும் இழப்புக்களும் ஏற்படாத வண்ணம் பாதுகாத்திருக்க முடியும். 
 
ஆனால் அங்கு அவ்வாறு இடம் பெறவில்லை. இச் சம்பவத்தில் தமிழர் ஒருவர் உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட அதேவேளை மேலும் நான்கு பேர் சம்பவம் தொடர்பான அதிர்ச்சியால் மரணமாகினர். 
 
இங்குள்ள வர்த்தக நிலையங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதால் சுமார் ஆயிரம் பேர் வரையிலானோர் தொழில் வாய்ப்புகளை இழந்திருக்கின்றனர். பாடசாலை மாணவர்கள் தமது அனைத்து உடைமைகளையும் அது மாத்திரம் அன்றி 272 கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளதுடன் இங்கு  86 கொள்ளைச் சம்பங்களும் நடந்தேரியுள்ளன. 
 
தர்கா நகரை கொண்டுள்ள நான் அங்குள்ள சிங்கள மக்களை நன்கு அறிவேன். அவர்களுடன் முஸ்லிம்கள் சகஜமாகவே வாழ்ந்து வருகின்றனர். எனினும் சம்பவம் தினத்தன்று புறபகுதிகளில் இருந்து வந்தவர்களாலேயே இந்த அசாம்பாவித சம்பங்கள் நடத்தப்பட்டுள்ளன.
 
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதா சூழல் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்ற நிலையில்  நடந்தேறியுள்ள சம்பவமானது மீண்டும் பழைய நிலைக்கு இழுத்துச் செல்லும் ஒரு செயற்பாடாகவே அமைந்திருக்கின்றது.

ad

ad