புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2014

தலைதப்பிய போர்ச்சுகல்: பிழைக்க வைத்த கடைசி கோல்
உலகக்கிண்ணத் தொடரில் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி வீரர் வாரேலா 95வது நிமிடத்தில் அடித்த கோலால் அந்த அணி தப்பித்தது.
நேற்று நடந்த இந்தப் போட்டியில் இரு அணிகளும் 2-2 என்ற நிலையில் இருந்ததால் ஆட்டம் டிரா ஆனது. இதனால் அமெரிக்கா 4 புள்ளிகள் பெற்றுள்ளது. போர்ச்சுகல் 1 புள்ளி பெற்றது.
மேலும் ஜேர்மனி அணி 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் உள்ள மற்றொரு அணியான கானா 1 புள்ளி பெற்றுள்ளது.
அமெரிக்கா இனி ஜேர்மனியுடன் ஒரு ஆட்டத்தில் ஆட வேண்டும். அதே போல் கானா அணி போர்ச்சுக்கலுடன் விளையாட வேண்டும்.
இடைவேளைக்கு சற்று முன்பாக போர்சுக்கல் அணி முன்னிலை பெற்றிருக்கும் ஆனால் அமெரிக்க கோல் கீப்பர் அதனை முறியடித்தார்.
நேனி அடித்தா ஷாட் ஒன்று கோல் போஸ்ட்டில் பட்டு மீண்டும் வந்தது. போர்ச்சுக்கல் வீரர் உடனே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கோலை நோக்கித் தூக்கி அடித்தார் ஆனால் அமெரிக்க கோல் கீப்பர் பிரமாதமாகத் தடுத்தார்.
ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஜெர்மெய்ன் ஜோன்ஸ் அற்புதமான கோல் அடித்து கோல் கணக்கை சமன் செய்தார்.
மீண்டும் ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் அமெரிக்க அணித்தலைவர் கிளிண்ட் டெம்ப்ஸி ஒரு கோல் அடிக்க 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா முன்னிலை பெற்றது.
அதன் பிறகு கூடுதல் நேரத்தில் பந்து வரேலாவிடம் வர அவர் அதனைத் தலையல் கோலுக்குள் தள்ளினார். இந்த கோலால் 2-2 என்ற சமநிலையில் போட்டி முடிந்தது.
இதன் மூலம் போர்ச்சுக்கல் அணி ஒரு புள்ளி பெற்று அடுத்த சுற்றில் நுழைய மிக சிறந்த வாய்ப்பு ஒன்றை உருவாக்கிக் கொண்டது.

ad

ad