புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2014


குற்ற வழக்கு! அதிமுக எம்.பி.க்கள் உள்பட 53 எம்.பி.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு!

53 மக்களவை உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்களுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டால் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. 


தேர்தலில் போட்டியிடும்போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் திரட்டப்பட்ட தகவல்களின்படி பாஜகவைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள், 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெறும் வகையில் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி ஆகிய மூன்று பேர் மீதும் பாபர் மசூதி இடிப்பு வழக்கு உள்ளது. மற்றவர்கள் கலவரத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இதேபோல் சிவசேனா கட்சியைச் சேர்ந்த 4 பேர், அதிமுகவைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 53 மக்களவை உறுப்பினர்கள் மீது 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெறும் வகையில் குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 23 பேர் மக்களவைக்கு முதல் முதலாக தேர்வு செய்யப்பட்டவர்கள்.
அதிமுகவைச் சேர்ந்த ஜி.ஹரி (அரக்கோணம்), அருண்மொழிதேவன் (கடலூர்), சத்யபாமா (திருப்பூர்) ஆகிய மூன்று எம்.பி.க்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. 
பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.பி.யான பப்பு யாதவ் மீது, அதிகபட்சமாக 13 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்ற வழக்குகளில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்றால், எம்.பி. 

ad

ad