புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2014



""ஹலோ தலைவரே... … நாடாளுமன்ற மக்க ளவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தே எந்தக் கட்சிக்கும் இருக்கக்கூடாதுன்னு பிரதமர் திட்டமிட்டிருப்பதைப் பற்றி போன முறை நாமதான் பேசினோம். நோ எதிர்க்கட்சி-மோடி பிடிவாதம்னு நம்ம நக்கீரனில் வந்திருந்தது.''

""தமிழ் பத்திரிகைகளில் இந்த விஷயத்தை விளக்கமா சொன்ன ஒரே பத்திரிகை நம்ம நக்கீரன்தானே!''

""மொத்த எம்.பிக்களில் 10% எம்.பிக்களாவது இருந்தால்தான் அதிகாரப்பூர்வ எதிர்க் கட்சி அந்தஸ்து கிடைக்கும். அதாவது, 54 எம்.பிக்கள் வேணும். காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்.பி.க்கள் மட்டுமே இருப்பதால், நோ எதிர்க்கட்சிங்கிற முடிவில் மோடி இருப்பதைச் சொன்னோம். ஆனாலும், காங்கிரஸ் இந்த அந்தஸ்துக்காக முயற்சிக்குது. சபாநாயகருக்கு சோனியா காந்தி எழுதியிருக்கிற கடிதத்தில், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து தரணும்னும், 10% எம்.பிக்கள் என்கிற விதி இப்போது பொருந் தாதுன்னும் பெரிய கட்சியான காங்கிரசுக்கு அந்த அந்தஸ்தை கொடுக்கணும்னும் கேட்டிருக்காரு.''

""சி.பி.ஐ டைரக்டர் நியமனம், தகவல் உரிமைச் சட்டம் தொடர்பான பதவிகள் இப்படி பலவற்றிலும் எதிர்க்கட்சியின் ஆலோசனையோடுதானே நியமனம் செய்தாகணும். அதுபோல பார்லிமெண்ட் டிலும் யார் முதலில் கேள்வி கேட்பது என்பதையும் முடிவெடுக்கணும். இதற் கெல்லாம் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி இருந்தாதானே சரியா இருக்கும்?''

""அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லைன்னாலும் மோடி அரசின் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை மீது நடந்த முதல் விவாதத்திலேயே கவனத்தை கவர்ந்துட்டாரே காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே! பா.ஜ.க எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி பேசுனப்ப, காங்கிரஸ் கட்சி மாநிலக் கட்சி போல சுருங்கிப் போச்சுன்னு நக்கலடிக்க, வெற்றி பெற்று விட்டதால ஆடவேணாம்னு சொன்ன கார்கே, நாங்க 44 பேர்தான் இருக்கோம். மகாபாரதப் போரில் கௌரவர்கள் 100 பேர் இருந்தாங்க. பாண்டவர்கள் 5 பேர்தான். ஆனா இறுதி வெற்றி யாருக்கு கிடைச்சுதுன்னு தெரியும். அதுபோல நாங்க 44 பேரும் மக்கள் நலனுக்காக இந்த அரசைத் தொடர்ந்து கவனிச்சி செயல்படுவோம்னு சொல்ல, சோனியா உள்பட பலரும் மேசையைத் தட்டி ஆதரிச் சாங்க.''

""பா.ஜ.க அல்லாத மற்ற கட்சி எம்.பிக்கள்கூட கார்கேவின் இந்த உடனடி பதிலை ரசிச்சிருக்காங்கப்பா...''

""பா.ஜ.க சீனியர் தலைவர்களான அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றவங்க கூட காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கொடுப்பது      தான் சரியான ஜனநாயக அணுகுமுறையா இருக்கும்னு சொல்றாங்களாம். மோடியோ, ஜனநாயகம்ங்கிறதே மக்களின் தீர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதானே.. மக்கள்தான் தங்கள் தீர்ப்பில் எதிர்க்கட்சி அந்தஸ்தை யாருக்கும் கொடுக்கலையே, அப்புறம் ஏன் அவங்க தீர்ப்புக்கு விரோதமா நாம ஒரு கட்சிக்கு அந்த அந்தஸ்தைக் கொடுக்கணும்னு தன்னோட நிலையில் பிடிவாதமாவே இருக்காராம். அதோடு இன்னொரு விஷயத்திலும் சீரியஸா இருக்காராம்.''

""என்ன விஷயம்?''

""நாடு முழுக்க இருக்கிற காங்கிரஸ் பிரமுகர்களும் அவங்களோட வாரிசுகளும் செய்த முறைகேடுகள் பற்றி ரிப்போர்ட் எடுத்து, புகாரா பதிவு செய்வதுங்கிறதுதான் மோடி கொடுத்திருக்கிற லேட்டஸ்ட் அசைன் மெண்ட். ராஜஸ்தான் மாநிலத்தில் இதுக்கு முன்னே காங்கிரஸ் ஆட்சி தான் நடந்தது. அப்ப சிகித்ஷா ஹெல்த்கேர்ங்கிற நிறுவனத்துக்கு ஆம் புலன்ஸ் சேவைக்கான அனுமதி கொடுக்கப் பட்டது. இதில் 2 கோடியே 58 லட்ச ரூபாய் ஊழல்னு அப்பவே புகார் எழுந்தது. ஆனா, காங்கிரஸ் ஆட்சி நடந்ததால இந்தப் புகாரைக் கண்டுக்கலை. 

""இப்பதான் பா.ஜ.க.வின் வசுந்தரராஜ சிந்தியாவின் ஆட்சி யாச்சே.. பழைய ஊழலைத் தூசு தட்டிட்டாங்களா?''

""ஆமாங்க தலைவரே.. ராஜஸ்தான் மாநில சி.பி. சி.ஐ.டி.தான் இந்த கேஸை டீல் பண்ணுது. எஃப்.ஐ.ஆரும் போட்டாச்சி.  முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், சுகாதாரத் துறையில் பொறுப்பில் இருந் தவங்க மேலே புகார் பதிவாகி யிருக்குது. விவகாரத்திலே சிக்கியிருக்கிற சிகித்ஷா ஹெல்த் கேர் கம்பெனியின் நிறுவனர், முன்னாள் மத்திய மந்திரி வயலார் ரவியோட மகன் ரவிகிருஷ்ணா. அந்த கம்பெனியில் முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் ஒரு டைரக்டர். அதுபோல, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தோட  மகன் கார்த்தி சிதம்பரமும் சிகித்ஷா ஹெல்த் கேரில் ஒரு டைரக்டர். தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திக்கு ராஜஸ்தானில் எப்படித் தொடர்புன்னு டெல்லி தீவிரமா விசாரிக்க ஆரம்பிச்சிருக்காம்.''

""அதானே, ராஜஸ்தான் வரைக்குமா கார்த்தி சிதம்பரம் டீலிங் பண்ணிக்கிட்டிருந்தாரு?''

""இந்த விவகாரம் கசிய ஆரம்பிச்சதும், மீடியாக்களுக்கு கார்த்தி ஒரு மெயில் அனுப்பி வச்சிருக்காரு. அதில், நான் அந்தக் கம்பெனிக்கு கௌரவ டைரக்டர்தான்னு சொல்லியிருக்காரு. பொதுவா, கௌரவப் பதவிங்கிறது ட்ரஸ்ட் போன்ற பொதுநல அமைப்புகளில்தான் இருக்கும். வணிகம் சார்ந்த நிறுவனமான சிகித்ஷா ஹெல்த் கேரில் என்ன கௌரவ டைரக்டர்னு மீடியாக்கள் தரப்பிலிருந்து கேட் கப்பட்ட கேள்விக்கு கார்த்தி கிட்டேயிருந்து இதுவரை பதில் இல்லை.'' 

""பவர்ஃபுல்லா இருந்த வங்களெல்லாம் கடுமையான புகார்களில் வசமாசிக்குறாங்கன்னு சொல்லு...''…

""சரியா சொன்னீங்க தலைவரே..… முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் சம்பந்தப்பட்ட வழக்கில் சி.பி.ஐ.  ரொம்ப மென்மையா இருந்த காலம் ஒன்று உண்டு. இப்ப மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப்பிறகு மாறன் பிரதர்ஸ் விவகாரத்தில் சீரியஸா  சி.பி.ஐ. செயல்படுவது பற்றி போன முறையே நம்ம நக்கீரனில் டீடெய்லா எழுதியிருந்தாங்க. பலரையும் சி.பி.ஐ. விடாமல் விசா ரிப்பதால, நிறைய தகவல் களை அள்ளியிருக்காங் களாம். தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரா தயாநிதி இருந்தப்ப அவரோட போட் கிளப் வீட்டில் ஒரு பி.எஸ்.என்.எல். இணைப்பு கொடுத்தது தெரியும். அந்த இணைப்பு மூலம் தனி எக்ஸ்சேஞ்சை அமைத்தது எந்தக் கம்பெனி, அதை சன் டி.வி. அப்லிங்கிற்காக எந்த டெக்னாலஜியின் அடிப் படையில் பயன்படுத்தி னாங்கன்னு சி.பி.ஐக்கு ரொம்ப நாளாவே குழப்பம்தான்.''

""இப்ப தெளிவா யிடிச்சா?''

""சமீபத்தில் திரட்டிய தகவல்கள் மூலமா புது விவரங்கள் தெரியவந்திருக்குதாம். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அல்காடெல் கம்பெனி 1869-ஆம் வரு சத்திலிருந்து தகவல் தொழில்நுட்பத்தில் முன்னோடியா இருக்குது. அந்தக் கம்பெனிதான் தயாநிதி வீட்டு எக்ஸ்சேஞ்சின் தொழில் நுட்பத்துக்குப் பயன் பட்டிருக்குது. அதுபோல, அப்லிங்கிற்குத் தேவையான ஹார்ட்வேர் உள்ளிட்ட கருவிகள் பிரபலமான எரிக்சன் கம்பெனி உதவியோடு செயல்படுத்தப்பட்டிருக்குது. அது சம்பந்தமான ஃபோட்டோக்களெல்லாம் இப்ப சி.பி.ஐ அதிகாரிகள் வசம் இருக்குது. அமைச்சரா இருந்த தயாநிதி வீட்டில் ஒரு எக்ஸ்சேஞ்ச் இருந்ததோடு, பக்கத்தில் உள்ள அவரோட அண்ணனும் சன் டி.வி. அதிபருமான கலாநிதி வீட்டிலும் ஒரு எக்ஸ்சேஞ்ச் இருந்ததையும் சி.பி.ஐ. கண்டுபிடிச்சிருக்குது.''

""சி.பி.ஐ. தோண்டித் துருவி விசாரிக்கிறதைப் பார்த்தா இன்னும் பல விவகாரங்கள் வெளிவரும் போலி ருக்குதே...''…

""கோட்டை விவகாரத்தோடு நான் லைனில் இருக்கேன். சொல்லட்டுமா? அம்மா உணவகம், அம்மா குடிநீரைத் தொடர்ந்து, அம்மா உப்பு விற்பனைக்கு வந்திடிச்சி. இதனால ஒவ்வொரு மந்திரியும் தங்கள் துறை சார்பா ஏதாவது ஒரு அம்மா பொருளை உருவாக்கி பெயர் வாங்கணும்னு அதிகாரிகளை நச்சரிக்க ஆரம் பிச்சிட்டாங்க. அதிகாரிகளும் தலையைப் பிய்ச்சிக்கிட்டு யோசிச்சிக்கிட்டிருக்காங்க. விரைவில் அம்மா டீ… விற்பனைக்கு வரப்போகுது. மார்க்கெட் விலையைவிட மலிவாக அம்மா டீத்தூள் விற்கப்படுமாம். இதையறிஞ்ச மற்ற துறை மந்திரிகளெல்லாம், அம்மாடீன்னு ஆச்சரியப் படுறாங்க.''

 லாஸ்ட் புல்லட்!

சி.பி.எம். மின் மத்திய குழு கூட்டத்தில் விவாதித்ததைப் பற்றி 14-ந் தேதியன்று நடக்கும் தமிழக மாநிலக் குழுவில் 3 மணி நேரம் பேசவிருக் கிறாராம் பிரகாஷ் காரத். மம்தா, அம்பானி பேச்சைக் கேட்டு கம்யூனிஸ்ட்டுகளை உதறிவிட்டு, பா.ஜ.க.வுடன் நெருக்கமாக இருக்கும் அ.தி.மு.க.வுடன் இனி கூட்டணி இல்லை என்பதுதான் சி.பி.எம். மத்திய குழுவில் நடந்த விவாதத்தில் முக்கிய அம்சமாம். சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலும், போராட்டக் களங்களிலும் "அ.தி.மு.க.வை வீழ்த்துங்கள்' என்பதே இனி தோழர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை என விளக்க இருக்கிறாராம் காரத். 

வெள்ளியன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த சொத்துக் குவிப்பு வழக்கு சம்பந்தமான மனு பற்றிய விசாரணையால் வியாழனன்றே டென்ஷனாக இருந்தார் ஜெ. கடந்த முறை விசாரணையின்போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக ஆஜரான வக்கீல், ஜெ.வுக்கு எதிராக எதுவும் பேசாமல் 3 வார காலம் தடை கேட்டார். அதற்கு நீதிபதி தெஹ்ரி, ""நீங்கள் ஜெ.வுடன் கூட்டணி அமைத்துவிட்டீர்களா?'' என்றார். அந்த தெஹ்ரியிடம்தான் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்பதே ஜெ.வின் டென்ஷனுக்கு காரணம்.

ad

ad