புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2014

காமரூன் அணியை வெளியேற்றியது குரோஷியா 
காமரூன் அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் குரோஷியா அணி வெற்றி பெற்றது.
பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் குரோஷியா, காமரூன் அணிகள் நேற்று மோதின.
பிரேசில் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் தோல்வியடைந்த குரோஷியா தொடரில் நீடிக்க கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கிறது. போட்டியின் துவக்கம் முதல் அதற்குரிய பொறுப்புடன் செயல்பட்ட குரோஷியா அணிக்கு 11வது நிமிடத்தில் ஓலிக் முதல் கோல் அடித்தார்.
போட்டியின் 40வது நிமிடத்தில் குரோஷிய வீரர் மான்சூயிக்கின் முதுகு பகுதியில், காமரூனின் அலெக்சாண்டர் சாங் தனது முழங்கையால் தாக்கியதால் ‘ரெட் கார்டு ’ காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் போட்டியை தொடர்ந்த காமரூன் அணி வீரர்களால் பதிலடி கொடுக்கமுடியவில்லை.
பின் இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த குரோஷியா அணிக்கு பெரிசிக் (48), மான்சூயிக் (61, 73) ஆகியோர் அடுத்தடுத்து அடி கொடுத்தனர். இதற்கு கடைசி வரை ‌போராடிய காமரூன் அணி வீரர்களால் ‌கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில், குரோஷியா அணி 4-0 என வெற்றி பெற்றது. காமரூன் தொடரில் இருந்து வெளியேறியது.

ad

ad