புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2014


அசாத் சாலியை கைது செய்த பொலிஸ் ஏன் ஞானசாரரை கைது செய்யவில்லை?! பொலிஸ்மா அதிபர் பதவி விலக வேண்டும்!- ஆங்கில செய்தித்தாள் 
வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டி அசாத் சாலியை கைதுசெய்ய முடியுமானால் ஏன் அதே தவறை செய்த கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய முடியாது என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இன்று நாட்டின் இறைமையை குறிவைத்து வன்முறைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இதற்கு தார்மீக பொறுப்பேற்று இலங்கையின் பொலிஸ் மா அதிபர் என் கே இலங்கக்கோன் பதவி விலக வேண்டும் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று ஆசிரியர் தலையங்கத்தில் கோரியுள்ளது.
அளுத்கமையில் பொதுபலசேனா பேரணி நடத்திய பின்னரே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்தன.
முன்னதாக பௌத்த பிக்கு ஒருவர் முஸ்லிம் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்தே இந்தப்பேரணி நடத்தப்பட்டது.
எனினும் பௌத்த பிக்கு தாக்கப்படவில்லை என்று வைத்திய அறிக்கைகள் உறுதிப்படுத்தின.
இருந்தபோதும் முந்திக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைத்திருந்த இலங்கையின் பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோன், குறித்த பௌத்த பிக்கு தாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இது பொறுப்பற்ற தமது பதவிக்கு அப்பாற்பட்ட குற்றமாகும்.
எனவே இலங்கக்கோன் பதவியை விட்டு விலகவேண்டும்.
இதேவேளை அளுத்கமவில் பொதுபலசேனா பேரணி நடத்திய போது அதற்கு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கினர்.
இதற்கு காரணத்தை கேட்டபோது அமைதியான பேரணி ஒன்றுக்கே பாதுகாப்பு வழங்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், குறித்த பேரணி, முஸ்லிம்களுக்கு எதிரான சுலோகங்களை தாங்கிய பேரணியாக இருந்தது.
எனவே அதனை அமைதிப் பேரணி என்று எவ்வாறு கூறமுடியும் என்று ஆங்கில செய்தித்தாள் கேள்வி எழுப்பியுள்ளது.
வன்முறையை தூண்டும் வகையில் அசாத் சாலியை கைதுசெய்ய முடியுமானால் ஏன் அதே தவறை செய்த கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய முடியாது என்றும் செய்திதாள் கேட்டுள்ளது.
அதேவேளை அளுத்கம வன்முறைச் சம்பவங்களில் யாரும் கொல்லப்படவில்லை என உண்மைக்கு புறம்பான தகவல்களை அவ்வப்போது பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான நோலிமிட் தீக்கிரையாக்கப்பட்ட போது இலங்கக்கோன் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
எனவே பொறுப்பற்ற செயல்களுக்காக இலங்கக்கோன் பதவி விலக வேண்டும் என்று ஆங்கில செய்தித்தாள் தமது கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது.

ad

ad