புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2014


திமுக பிரமுகர் ஆக்கிரமித்திருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

தாம்பரம் அருகே உள்ள மாம்பாக்கம் மெயின் ரோட்டில் சித்தாலப் பாக்கம் சந்திப்பில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கும்
மேலாக அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. முக்கிய பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து அந்த இடத்தில் 86 கடைகள் கட்டப்பட்டிருந்தன.
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டிருப்பது பற்றி காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரை அடுத்து, அவருடைய உத்தரவின் பேரில் சோழிங்கநல்லூர் தாசில்தார் ரவிச்சந்திரன் அந்த இடத்தை ஆய்வு செய்தார். அதில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.இதனையடுத்து இன்று காலையில் கடைகளை இடிக்கும் பணி தொடங்கியது. 5 ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கடிகள் இடிக்கப்பட்டன. பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்காக பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ad

ad