புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2014


ராமநாராயணன் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி ( படம் )
திரைப்பட இயக்குனரும் ,கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமநாராயணன்  மறைவையொட்டி அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார் மு.க.ஸ்டாலின்.

 பின் செய்தியாளர்களை சந்தித்த போது,  ‘’திரைப்பட இயக்குனரும்,தயாரிப்பாளருமான ராமநாராயணன் அவர்கள் திரைவுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் அவர் சிறப்பாக பங்கு ஆற்றியவர் ,காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பல்வேறு பணிகளை சிறப்பாக செய்தும் திரைத்துறையில் மிகப்பெரிய வரலாற்றை படைக்கும் வகையில் 125 படங்களை இயக்கிய பெருமையும் கொண்டவர். எல்லோரிடத்தும் பெரியவர் முதல்

சிறியவர் வரை இன்முகத்தோடு பழகும் ஆற்றல் பெற்ற ராமநாராயணன் அவர்களை இழந்து வாடும் அவரின் அருமை மகனுக்கும்,குடும்பத்திற்கும் என் ஆழ்ந்த இரங்கலை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறேன்’’என்று கூறினார்.

ad

ad