புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014


கலைஞருடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு
தி.மு.க. தலைவர் கலைஞர் கடந்த 3-ந் தேதி, தனது 91-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள்
என முக்கிய பிரமுகர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். 'லிங்கா' படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசி மூலம் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், கலைஞரை நேரில் சந்தித்து, கைகுலுக்கி தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார். பின்னர் கலைஞரும், நடிகர் ரஜினிகாந்தும் சுமார் 15 நிமிடங்கள் பேசினர்.


கலைஞரை சந்தித்துவிட்டு 11.05 மணியளவில், கலைஞர் இல்லத்தில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
கேள்வி:- தி.மு.க. தலைவர் கலைஞருடன் 'திடீர்' சந்திப்புக்கான காரணம் என்ன?
பதில்:- கலைஞர் பிறந்தநாளான்று நான் ஐதராபாத்தில் இருந்து தொலைபேசி மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இன்று நேரில் வாழ்த்து கூறுவதற்காக சந்தித்தேன்.

கேள்வி: - கலைஞரிடம் வேறு ஏதேனும் பேசினீர்களா?
பதில்:- 'கோச்சடையான்' திரைப்படத்தை நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள் என்று அழைப்பு விடுத்தேன்

ad

ad