புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2014


பாலபாரதி கைது: காவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு கண்டனம்: ஜி.ரா. அறிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


திண்டுக்கல் நகரில் அங்குவிலாஸ் இறக்கத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையில் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை (எண் 3122) வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் சார்பிலும், வாலிபர், மாதர் சங்கங்கள் சார்பிலும் தொடர்ச்சியாக பலமுறை வலியுறுத்தி இயக்கங்கள் நடத்தியும் கடையை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று (26.6.2014) காலை திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை என்று கூறி எம்.எல்.ஏ., பாலபாரதி அவர்களை முரட்டுத்தனமாக காவல்துறை கைது செய்து, அவர்களோடு ஆர்ப்பாட்டம் நடத்திய வாலிபர் சங்கத்தினரை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி விரட்டியடித்துள்ளனர்.
இருவர் பலத்த காயமடைந்துள்ளனர், பெண்களை தரக்குறைவான வார்த்தைகளால் உதவி ஆய்வாளர்கள் சி. கண்ணன் மற்றும் கணேசன் ஆகியோர் பேசி அடித்து விரட்டியுள்ளனர், மயக்கமடைந்து விழும் வரை ஒருவரை காவல்துறை கடுமையாக தாக்கியுள்ளது.
காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இதுபோல் மத்திய அரசின் ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று (25.6.2014) மாதர், வாலிபர், மாணவர் இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தின் போதும் சில இடங்களில் தமிழக காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளனர். நாகப்பட்டினத்தில் வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஆர். வேல்முருகன், மாவட்டச் செயலாளர் ரவி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயந்தி, மாணவர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சிங்காரவேலு உட்பட பலர் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெயந்தியை நெஞ்சின் மீது லத்தியால் குத்தி தாக்கியுள்ளனர். வேல்முருகன் மற்றும் ரவியின் உடைகளை கிழித்துள்ளனர். மதுரையில் மாணவர் சங்க தலைவர்கள் கார்த்திக், செல்வா, கோவையில் ஷேக் சம்சுதீன், பிரபு உள்ளிட்ட மாணவர் சங்க மாவட்டத் தலைவர்களும், கே.எ°. கனகராஜ், ரவீந்திரன் ஆகிய வாலிபர் சங்கத் தலைவர்களும் காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். வேலூரிலும் மாணவர், வாலிபர் சங்கத்தினர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டா°மாக் கடையை அகற்றிடவும், தடியடி தாக்கதல் நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மேலும் நியாயமான கோரிக்கைகளுக்காக நடைபெறும் இயக்கங்கள், போராட்டங்களுக்கு அனுமதியில்லை என்று மறுப்பது, அமைதியாக போராடும் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை தொடுப்பது, தாக்குதலில் காயமடைந்தவர்கள், மயக்கமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க மறுப்பது போன்ற தமிழக காவல்துறையின் நடைமுறைகள் கடும் கண்டனத்திற்கு உரியது. காவல்துறையின் இத்தகைய அத்துமீறல்களை தடுத்து நிறுத்திட வேண்டுமென்றும்; ஜனநாயக உரிமை மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென்றும் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

ad

ad