புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2014

புங்குடுதீவு, எழு வைதீவு, மண்டைதீவு, முள்ளியான், சுன்னாகம், ஏழாலை, வட்டுக்கோட்டை, குரும்பசிட்டி மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர்கள் கடமையாற்றவில்லை.எட்டு மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர் இல்லை; யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தெரிவிப்பு 
யாழ்.மாவட்டத்தில் இன்னமும் 8 மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் குறித்த மருத்துவ மனைகளில் ஒப்பந்த
அடிப்படையிலான மருத்துவர்களே கடமையாற்றுவதாகவும் யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  அ.கேதீஸ்வரன்  தெரிவித்தார்.
 
யாழ்.மாவட்ட ஒருங் கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுகாதார சேவைகள் தொடர்பிலான அபிவிருத்தி மீளாய்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் 160 மருத்துவர்கள் கடமையாற்ற வேண்டும். இந்த ஆண்டு ஆரம்பத்தில் நூறு மருத்துவர்களே கடமையாற்றிக் கொண்டிருந்தனர். இருப்பினும் தற்போது 130 மருத்துவர்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். 
 
இன்னமும் 30 மருத்துவர்கள் தேவையாகவுள்ளது. யாழ். போதனா மருத்துவமனையிலிருந்து வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் 20 மருத்துவர்கள் வரவேண்டியுள்ளது.
 
யாழ்.போதனா மருத்துவ மனைக்கு பதிலீட்டு மருத்துவர்கள் நியமிக்கப்படும் போது அங்கிருந்து , இடமாற்றம் பெற்றவர்களை  விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்த வருட இறுதிக்குள் 20 மருத்துவர்களும் வந்து சேருவர். மேலும் புதிதாக வெளியேறுபவர்களில் 15 பேர் எமது திணைக்களத்துடன் அடுத்த சில மாதங்களில் இணைக்கப்படுவர். அவர்களும் இணைக்கப்பட்டால் யாழ். மாவட்டத்தின் மருத்துவர் தேவை பூர்த்தியாகும்.
 
தற்போது புங்குடுதீவு, எழு வைதீவு, மண்டைதீவு, முள்ளியான், சுன்னாகம், ஏழாலை, வட்டுக்கோட்டை, குரும்பசிட்டி ஆகிய மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர்கள் எவரும் கடமையாற்றவில்லை. குறித்த மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை நியமித்துள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த மருத்துவமனைகளுக்கான  மருத்துவர்களும் நியமிக்கப்பட்டுவிடுவார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.  

ad

ad