புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2014

அஞ்சலிக்கு மறுப்பு பொசனுக்கு குடைபிடிப்பு- துணைவேந்தரின் இரட்டை முகம் 
யாழ்.பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக இன்றைய தினம் கொண்டாடப்பட்ட பொசன் பண்டிகையில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் கலந்து கொண்டதுடன் பொசன் பண்டிகை தீபத்தை ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.


கடந்த காலங்களில் இறுதி போரின் போது அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதனை மாணவர்கள் தீபம் ஏற்றி நினைவு கூர்வதற்கு திட்டமிட்டரீதியில் குறித்த காலப்பகுதியில் பல்கலைக்கழகத்தை இழுத்து மூடச்செய்ததுடன் மாணவர்களின் உணர்வுகளுக்கு தடைவிதித்திருந்தார்.

இத்தகைய நிலையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெரும்பான்மையினமான சிங்கள மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொசன் பண்டிகையினை கேளிக்கையாக நடாத்த நடாத்த அனுமதி வழங்கியதுடன் பொசன் தீபத்தினையும் ஏற்றி மாணவர்களாகிய எம்மிடம் கசப்புணர்வினை துணைவேந்தர் ஏற்படுத்தியுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.



 

ad

ad