புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2014


மாநில கட்சியாக சுருங்கிய காங்கிரஸ்: பாஜக கருத்தால் மக்களவையில் சலசலப்பு: மல்லிகார்ஜீனகார்கே பதிலடி

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி மக்களவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது
பேசிய அவர்,

காங்கிரஸ் கட்சி கடந்த 65 ஆண்டுகளுக்கு மேல் அரசு அமைத்து கோலோச்சியது. அப்போது அவர்கள் பெரும்பான்மையுடன் இருந்தனர். அக்கட்சியின் இன்றைய நிலைமை 44 உறுப்பினர்கள்தான். அதையும் கணக்கெடுத்து பார்க்கும்போது பாதிக்கு பாதி ஆகிவிட்டது. ஒரு தேசிய கட்சி, மாநில கட்சியாக இந்த நாடாளுமன்றத்தில் வரவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்றார். 
ராஜீவ் பிரதாப் ரூடி பேச்சுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. 
பின்னர் பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீன கார்கே, எண்ணிக்கையை வைத்து ஒப்பிடும்போது, பாண்டவர்கள் கவுரவர்களை விட எண்ணிக்கையில் குறைவாகத்தான் இருந்தார்கள். ஆனால் அவர்களை இறுதிவரை  வீழ்த்த முடியவில்லை. அதேபோல் தான் நாங்களும். சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம். அரசு தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டுவோம். மக்களுக்கு எடுத்துக் கூறுவோம். எங்கள் நிலைப்பாட்டை விளக்குவோம் என்றார். 

ad

ad