புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2014


பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் வன்முறை!ஜெயா அரசின் அலட்சியப் போக்கே காரணம் :இள.புகழேந்தி

பொள்ளாச்சி மாணவிகள் கடத்தல் பாலியல் வன்முறை! ஜெயா அரசின் அலட்சியப் போக்கே காரணம். விதிமீறல் விடுதிகளை தொடர்ந்து நடத்திட ஆளுங்கட்சி ஆதரவு என்று

தி.மு.க. மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்!

 தி.மு.க. மாணவர் அணி செயலாளர், இள.புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,’’ஜெயலலிதாவின் ஆட்சிக் காலங்களில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு தினசரிநடக்கின்ற சாதாரண நிகழ்வுப் போல் உள்ளது. குற்றநிகழ்வுகள் நடைபெறுவதைப் பற்றிகவலைப்படாமல் ஜெயலலிதா தன் புகழ்பாடிகளை வளர்ப்பதிலும், பதவிகளை வாரிவழங்குவதிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.
 பல அதிகாரிகள் முதலமைச்சரை சுற்றியே வருவதும் ஆராதனை செய்வதும், அ.தி.மு.க.வினருக்கு போட்டியாக ஹெலிக்காப்டரை கும்பிட்டு மகிழ்வதுமாக உள்ள கேவலம் வேறு எங்கும் காண முடியாத அவலம். நாட்டு நிலையை சரியாக புரிந்து கொள்ளாமல் ஜெயா தன் விருப்பப்படி அறிக்கைகளைவிட்டு ஆட்சி செய்கிறார் என்பதற்கு உதாரணமாகஜூன்-1 முதல் மின்வெட்டே இருக்காது என அறிக்கை வெளியிட்ட அவரைவேக்காட்டுத்தனமே சாட்சியாக உள்ளது.

அடிக்கடி அதிகாரிகளை மாற்றுவது, தனது கொத்தடிமையான மந்திரிகளைபந்தாடுவது, நிர்வாகத்தை சீர்ப்படுத்துவதற்காக அல்ல, சுயநலக் காரணங்களுக்காகஎன்பது வெளிப்படையாக மீண்டும் தெரிவது, பொள்ளாச்சி மாணவிகள் கடத்தப்பட்டு,பாலியல் வன்முறை செய்துள்ள நிகழ்வு நிரூபித்துள்ளது.

ஜெயா அரசின் சமூகநலத் துறையின் அலட்சியம். மாணவ-மாணவிகளின்விடுதிகளை உரிய காலங்களில் ஆய்வு செய்யாத கடமைத் தவறிய செயல்.விதிமீறல்களை செய்து மாணவிகளை தங்கவைத்த சட்டவிரோதப் போக்கை தடுக்கநடவடிக்கை எடுக்காத எதேச்சதிகாரம். அத்துறை தூங்கிய வழிய முதல்அமைச்சர்ஜெயாவே முன்னுதாரணமாக உள்ளார். மார்ச்-17ஆம் தேதி எழுத்து மூலமாக புகார்அவ்விடுதியின் பாதுகாப்பின்மை குறித்து ஜெயாவின் மாவட்ட நிர்வாகத்திடமும் சமூகநலத்துறையிடம் பொது ஆர்வலர் மூலமாக அளிக்கப்பட்டுள்ளது.

ad

ad