புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2014

பரபரப்பான புதிய செய்தி 
பாகிஸ்தானின் கராச்சி  விமான நிலையம் அதிர்ந்தது.தலிபான்கள் கொடூரத் தாக்குதல் .விடுதலைப்புலிகளின் பாணியில் தாக்குதல் 
news

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

நேற்றிரவு  துப்பாக்கிதாரிகள் பாகிஸ்தான் விமான நிலையத்தைத் தாக்கியதில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். 


இந்த நிலையில் விமான நிலையத்தை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்த பின்னர், இன்று மேலும் இரண்டு குண்டு வெடிப்பு சப்தங்கள் கேட்டதாக வெளிநாட்டு செய்திகள் கூறுகின்றன. 

இந்த சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் மேலும் குவிக்கப்பட்டுள்ளனர். 

நேற்றைய தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில், தாக்குதலை நடத்திய 10 பேரும் அடங்குவர். நேற்றிரவு சுமார் ஐந்து மணி நேரங்கள் நீடித்த இந்தத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் காயமடைந்தனர். 

ஆயுததாரிகள் விமான நிலையத்தின் சரக்கு முனையகத்தின் வழியாகவும், தனியார் விமான முனையகத்தின் வழியாகவும் புகுந்து கையெறிகுண்டுகளையும், தானியங்கித் துப்பாக்கிகளையும் பயன்படுத்தித் தாக்கியதாக பிபிசி குறிப்பிட்டுள்ளது. 

விமான நிலையத்தில் இருந்த சரக்குப் பொதிகளுக்கு தாக்குதல்தாரிகள் தீவைத்தனர். ஆனால் விமானங்கள் எதுவும் தாக்குதலுக்குள்ளாகவில்லை எனத் தெரிகிறது.  இந்த நிலையில் இந்தத் தாக்குதலை தாம் தான் நடத்தியதாக பாகிஸ்தான் தலிபான் பிரிவினர் கூறியிருக்கின்றனர். 

"பாகிஸ்தானின் கிராமங்கள் மீது நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்களில் அப்பாவிக் கிராமவாசிகள் பலியாவதற்கு பழிக்குப் பழி வாங்க நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்பதை பாகிஸ்தான அரசுக்குச் சொல்லவே இந்தத் தாக்குதலை நடத்தினோம்" என்று பாகிஸ்தான் தலிபான் அமைப்புக்காகப் பேசிய ஷாஹிதுல்லா ஷாஹித் கூறியதாக ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


(முதலாம் இணைப்பு)
பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய விமான நிலையமான கராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகள்  நடத்திய இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட   23 பேர்  கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இராணுவத்தினருக்கும்  துப்பாக்கிதாரிகளுக்கும் இடையில் பல மணித்தியாலங்களாக தொடர்ந்த பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் 10 ஆயுததாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
 
துப்பாக்கிதாரிகள் வசமிருந்த ஆயுதங்களும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
14 பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
ஆயுததாரிகள் போலியான அடையாள அட்டைகளுடன் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் பழைய முனையத்திற்குள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
 
நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதேவேளை, விமான போக்குவரத்து முற்றிலும்  நிறுத்தப்பட்டுள்ளதுடன் அனைத்து விமானங்களும் ஏனைய  விமான நிலையங்களுக்கு  அனுப்பபட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிர்ந்தது கராச்

ad

ad