புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2014


சர்ச்சையில் சிக்கிய யப்பான் நடுவர்  நிஷிமுரா
பிரேசில்- குரோஷியா அணிகள் மோதிய கால்பந்தாட்ட போட்டியில் நடுவர் நிஷிமுரா வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கிண்ண கால்பந்து தொடரின் முதல் போட்டியில் பிரேசில், குரோஷியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இப்போட்டி நடந்த போது குரோஷிய வீரர் லவ்ரனின் கால் இடறி பிரேசில் வீரர் பிரெட் கீழே விழுந்ததும், பெனால்டி கிக் வழங்கினார் நடுவர் நிஷிமுரா.
சர்ச்சையை கிளப்பியுள்ள அவரது இந்த முடிவுக்கு குரோஷிய அணி பயிற்சியாளர் நிகோ கோவக் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவக் கூறுகையில், பெனால்டி கொடுக்கும் அளவுக்கு அப்படி என்ன தவறு நடந்துவிட்டது.
நிஷிமுரா செய்தது சரி என்று கை தூக்குபவர்கள் ஒருவர் கூட இருக்க முடியாது.
சநடுவர்கள் இது போல நடந்துகொண்டால், இந்த உலக கிண்ணப் போட்டிகளில் 100 பெனால்டி கிக் கொடுக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை என கடுமையாக சாடியுள்ளார்

ad

ad