புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2014


ஐநா விசாரணைக்கு கட்சி பேதமின்றி எதிர்ப்பினை வெளியிட வேண்டும்!- தயான் ஜயதிலக
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விசாரணைக்கு கட்சி பேதமின்றி எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என ஜெனீவாவுக்கான முன்னாள் வதிவிட பிரதிநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஒரு செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய விஷேட செவ்வியின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மனித உரிமை அலுவலக அதிகாரிகள் இலங்கை வர முயற்சித்தால், அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர்களுக்கு நன்றாக தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணை குழுவிற்கு இலங்கை வர அனுமதித்தால், இன்னல்களுக்கு முகங் கொடுக்க நேரிடும்.
ஏன் என்றால் அவர்கள் சகல இராணுவ முகாமிற்கும் விஜயம் செய்வதுடன் விரும்பிய இராணுவ அதிகாரிகளுடனும் உரையாடுவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, கட்சி பேதமின்றி சகலரும், சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என ஜெனீவாவுக்கான முன்னாள் வதிவிட பிரதிநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் விசாரணைகள் முழுமையான ஒன்றாக இருக்காது என இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் ஆணையாளர்களில் ஒருவரான பிரதீபா மஹநாமஹேவா தெரிவித்துள்ளார்.

ad

ad