புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2014

போர்க்குற்ற விசாரணை குறித்து கருத்தாய்வு நாடாளுமன்றில் நடைபெறும் 
போர்க் குற்ற விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து கோரப்பட உள்ளது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதாபிமான மீட்புப் பணிகளின் போது
போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து,  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின்  ஆணையாளர் நவநீதம்பிள்ளை விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது நியாயமானதா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துக்  கோரப்படவுள்ளது.
 
போர்க்  குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேசரீதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை விசாரணை நடத்த உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த விசாரணைக் குழுவை  இன்று செவ்வாய்க்கிழமை பெயரிடுவார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
 
எனவே விசாரணைக் குழு அமைப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்ள அரசு  திட்டமிட்டுள்ளது.

ad

ad