புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2014

இணையத்தின் ஊடே நிதிக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் போது எச்சரிக்கை தேவை 
 இணையத்தின் ஊடான நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது அவசியம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

 
அலுவலக கருமங்களை இலகு படுத்தும் நோக்கில் இணையம் மற்றும் ஏனைய வலையமைப்புக்கள் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
 
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக பணம் செலுத்தும் போது அரசாங்க நிறுவனங்களின் ஊடாக பணம் செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளதுடன் புற நபர்களிடம் பணம் செலுத்த வேண்டாம் என சுட்டிக்காட்டியுள்ளது.
 
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்திற்கு நிகரான ஓர் இணையத்தினை பயன்படுத்தி அண்மையில் பாரியளவில் நிதி மோசடி செய்யப்பட்டமை அம்பலமாகியிருந்தது.
 
போலியான வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்குவோர் அல்லது மோசடிகாரர்களிடம் மக்கள் சிக்கிவிடக் கூடாது என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மக்களிடம் கோரியுள்ளது.
 
வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்கும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் காணப்பட்டால் 1919 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு சந்தேகங்களை களைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad