புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2014


மன்னார் மனிதப் புதைகுழி: அறிக்கை சமர்ப்பிக்குக -மன்னார் நீதிபதி ஆனந்தி 
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது
.
இதன்போது சென்ற தடவை நீதிமன்றத்தால் காணாமல்போனோர் சார்பாக முன்நிலையாகியிருந்த மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் செய்த விண்ணப்பத்தின் அடிப்படையில் இரண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதாவது புதைகுழி அகழப்பட்ட இடத்தை அகலப்படுத்துவது மற்றும் புதைகுழிக்கு அருகிலுள்ள கிணறு தோண்டப்படுவது சம்பந்தமாகவும் கேட்கப்பட்டது.
மன்றில் ஆஐரான குற்றபுலனாய்வுப் பிரிவினர் இதற்கான அறிக்கை எதனையும் மன்றில் சமர்ப்பிக்கவில்லை.
இதற்கு மாறாக தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தால் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்தபடி இந்த பகுதியில் 1950, 1951ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஒரு மயானம் இருந்திருக்கலாம் என்ற ஓர் அறிக்கையை மட்டும் சமர்ப்பித்திருந்தனர்.
அதனை ஊர்ஜிதம் செய்வதுபோலவே பொலிஸாரும் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தனர். ஆனாலும் மன்னார் பிரதேச சபை தலைவரிடமிருந்து ஒரு கடிதம் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் பெற்றிருந்தனர்.
அதில் இந்தப் பகுதியில் எக்காலத்திலும் மயானமோ இடுகாடோ புதைகுழியோ இருக்கவில்லையென்று கூறப்பட்டிருந்தது.
அந்தக் கடிதமும் நேற்று மன்னார் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கான ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கொழும்பு குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளது. அத்துடன் வழக்கும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இவ் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப் புலனாய்வு அதிகாரி எஸ்.ஐ.தேவர், சார்ஜன்ட் சொய்சா ஆகியோரும் காணாமல் போனோர் சார்பாக சட்டத்தரணிகள் இராஜகுலேந்திரா தலைமையில் வீ.எஸ். நிரஞ்சன், ஜெபநேசன் லோகு, பிறிமூஸ் சிராய்வா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரத்திலிருந்து மாந்தை பகுதிக்கு குடிநீர் வழங்கும் நோக்குடன் வீதியோரமாக குழாய்கள் பதிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் மனித எலும்புக் கூடுகளும் மனித எச்சங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.
தொடர்ச்சியாக 32 தினங்கள் மேற்கொள்ளப்பட்ட போது 80 மனித மண்டையோடுகளும் மனித எச்சங்களும் மற்றும் வேறு தடயப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இவ் வழக்கு தற்பொழுது நடைபெற்று வருகின்றது.

ad

ad