புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2014


உலகக் கோப்பை ஹாக்கியில்  நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு

ஸ்பெயின் அணியுடன் டிரா செய்து முதல் புள்ளியை பெற்றது. பின்னர் மலேசிய அணியுடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். கடுமையாக போராடிய இந்திய வீரர்கள், கிடைத்த வாய்ப்புகளை நழுவவிட்டனர். இதனால் முதல் பாதியில் 4-0 என ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் கடுமையாகப் போராடினர். ஆனால் அவர்களின் கோல் முயற்சிகளை ஆஸ்திரேலிய அணி தடுத்தது. அதேசமயம் அவர்களும் மேற்கொண்டு கோல்கள் அடிக்கவில்லை. இறுதியில் 4-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இதன்மூலம் அனைத்து லீக் போட்டிகளிலும் வென்ற ஆஸ்திரேலியா 15 புள்ளிகளுடன் அரையிறுதியை உறுதி செய்தது. இந்தியா 4-வது இடத்தில் நீடிக்கிறது. பி பிரிவில் நெதர்லாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ad

ad