புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014



ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்

விஜயவாடாவுக்கும் குண்டூருக்கும் இடையே அமைந்துள்ள நாகர்ஜூனா நகரில், பிரம்மாண்டமாக நடந்த விழாவில், சந்திரபாபுவுக்கு கவர்னர் நரசிம்மன் பதவிப்பபிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 19 அமைச்சர்களும் பதவிபிரமாணம் எடுத்துக் கொண்டனர். இந்த விழாவிற்கு ரூ.30 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில், தெலுங்கு தேசம் கட்சி 102 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்த விழாவில் பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, 15 ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஒடீசா, பஞ்சாப், கோவா மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். விவேக் ஒபராய் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். 5 லட்சத்திற்கும் மேலான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் வைத்திலிங்கம் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொள்ள சந்திரபாபு நாயுடு அழைப்பு அனுப்பிய போதிலும் கலந்து கொள்ளப்போவதில்லை என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகனும் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த விழாவில் தொண்டர்கள் கலந்து கொள்ள வசதியாக 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு முதல்வராவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

சீமாந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.அவருக்கு ஆந்திரா ஆளூநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ad

ad