புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2014


பிரபாகரன் உயிரிழந்ததாக கருதகவில்லை!– யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பி;ள்ளை உயிரிழந்ததாக கருதவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் எம். சுகுமாரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
நான் மட்டுமல்ல வடக்கு மக்களும் பிரபாகரன் உயிரிழந்ததனை நம்பவில்லை.
யாழ்ப்பாணத்தில் சுதந்திரமாக கருத்து வெளியிட சந்தர்ப்பம் கிடையாது.
எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகின்றது. இவ்வாறு பேசும் எனக்கு நாளை என்ன நடக்கும் எனத் தெரியாது.
வெள்ளாமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்த சாதாரண மக்களுக்கு அஞ்சலி செலுத்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் பயனில்லை.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் சுதந்திரமாக கருத்து வெளியிட்டால்,  அவ்வாறனவாகளை பயங்கரவாதத் தடைப் பிரிவு துரத்துகின்றது.
பல்கலைக்கழக பேராசிரியர்களை மௌனிக்கச் செய்தால் ஏனையவர்களையம் மௌனிக்கச் செய்ய முடியும் என படையினர் கருதுகின்றனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் சட்டத்தை மீறிச்செயற்பட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad