புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2014


பேருவளை பாரபட்சமற்ற விசாரணை நடத்துவோம்: யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரானது தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல, மஹிந்த
அளுத்கமை,பேருவளை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாம் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
தெரிவித்தார்.
சற்று முன்னர் பேருவளைக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, களுத்துறை மாவட்ட செயலகத்தில் நடைபெறும் விசேட கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பேருவளையில்
மோதல்கள் நடைபெற்ற பிரதேசங்களில் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று பேருவளை பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்தார்.
பிரதேசத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள், முஸ்லிம் மத தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவும் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளார்.
யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரானது தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல - ஜனாதிபதி
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தமிழ் சமூகத்திற்கு எதிரான யுத்தம் அல்ல எனவும் அது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெக்கிகோ நக்காவோ இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளர்.
இவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது போருக்கு பின்னரான அபிவிருத்திகள் குறித்து ஜனாதிபதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கு விளக்கியுள்ளார்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் எவ்வாறு உடனடியாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டமை குறித்தும் ஜனாதிபதி விளக்கியுள்ளார்.
போருக்கு பின்னர், வடக்கு மாகாணத்தில் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி இதன் போது விபரித்துள்ளார்.
நேரில் சென்று அபிவிருத்திகளை பார்வையிட்டு அறிந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரிடம் கூறியுள்ளா
ர்.

ad

ad