புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2014

இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமானதல்ல - கும்புறுகமுவே வஜிர தேரர்
news
இலங்கை என்பது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்பதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும்
உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு அமைதியாக வாழும் உரிமை நாட்டில் வாழும் சகலருக்கும் இருக்க வேண்டும் 
எனவும் பேராசிரியர் கும்புறுகமுவே வஜிர தேரர் தெரிவித்தார்.
 
தேசிய ஐக்கியத்திற்கான சர்வ மத அமைப்பு கொழும்பில் இன்று ஒழுங்கு செய்த செய்தியாளர் சந்திப்பில் அவர் 
இதனை தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்
 
வதந்திகளுக்கு ஏமாறாது அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
 
இலங்கையில் உள்ள சிலர் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க முயற்சித்து வருகின்றனர். 
 
இந்த முயற்சிகளில் புதிய பிரதிபலன்களை அண்மையில் அளுத்கம பிரதேசத்தில் காணமுடிந்தது. 
இனவாதம்  மதவாத செயற்பாடுகளினால் ஏற்பட்ட சேதங்களை நாட்டு மக்கள் கடந்த 30 வருடங்களாக அனுபவித்து
வந்துள்ளனர். 
 
பகைக்கு பகையல்ல என்ற பௌத்த வசனத்தை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என மக்களிடம் கோரிக்கை
 விடுக்கின்றோம்.
 
யார் தவறு செய்தாலும் அந்த தவறுக்கு சட்டத்தின் மூலம் அரசாங்கம் தண்டனை வழங்க வேண்டும் எனவும் வஜிர
 தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad