புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2014


இருநாட்டு வளர்ச்சிக்கு இணைந்து செயலாற்றுவோம்: நவாஸ்ஷெரீப் கடிதத்திற்கு மோடி பதில்

பிரதமர் நரேந்திரமோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பாகிஸ்தான் சென்ற ஷெரீஃப், தம்முடைய இந்திய பயணம் திருப்திகரமாக அமைந்ததாகவும் புதிய அரசுடன் இணைந்து செயல்பட
விரும்புவதாகவும் கடிதம் எழுதினார்.

மேலும் இரு நாடுகளுக்கு இடையே உள்ள தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண தான் விரும்புவதாகவும் ஷெரீஃப் தெரிவித்திருந்தார். 
இந்நிலையில் அவருக்கான பதில் கடிதத்தை நரேந்திரமோடி அனுப்பியுள்ளார். அதில், தாங்கள் விரும்பியபடி இருநாட்டு வளர்ச்சிக்கு இணைந்து செயலாற்றுவோம். பாகிஸ்தான் அரசுடன் இணைந்து, இரு நாடுகளுக்கு இடையே இணக்கமான சூழலில் செயல்பட தாம் விரும்புவதாக தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் இடையேயான நட்புறவு மேலும் வளரும் என நம்பிக்கை தெரிவித்துள்ள மோடி, கராச்சி விமான நிலையத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ad

ad