புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014


பள்ளி மாணவர்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசு ரூ.18 ஆயிரம் கோடி நிதி
 விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக நலத்துறையின் மூலம் தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவித் தொகை, மாற்றுத் திறனாளி நலத்துறையின் மூலம்
விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றன.

 இவ் விழாவுக்கு ஊரக தொழில்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பங்கேற்று சமூக நலததுறையின் மூலம் 734 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி தொகைக்கான காசோலை மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கம், 50 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 50 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றின் கீழ் பணி ஆணை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் 60 பயனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல், இரண்டாம் இடத்தில் மதிப்பெண் பெற்ற 3 பார்வையற்ற மாணவிகளுக்கு பரிசுத் தொகை, 22 பயனளிகளுக்கு காதுக்குப்பின் அணியும் காதொலிக் கருவி, 10 பயனாளிகளுக்கு நவீன செயற்கை கால் வழங்குதல் என மொத்தம் 943 பயனாளிகலுக்கு ரூ.3,61,11,450 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டன.
 இந் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன் பேசியது:
 தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் போன்றோர் பெண் களின் முன்னேற்றத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும், மகளிரின் மேம்பாட்டுக்காகவும் கனவு கண்டார்கள். அந்த கனவுகளை எல்லாம் தமிழக முதல்வர்  செயல்படுத்தி வருகிறார்.
 அதுமட்டுமல்லாமல் அம்மா உணவகங்கள் மாநகராட்சிகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நகராட்சிகளிலும் அம்மா உணவகங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், திண்டிவனம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் அம்மா உணவகங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 அதேபோன்று பள்ளிக் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளி மாணவர்களின் மேம்பாட்டுக்காக ரூ.18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நமது மாவட்டத்தை பொறுத்த வரையில் கல்வித் துறை 30-வது இடத்தில் இருந்து 25-வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 மேலும் தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள். தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
 அவற்றில் பசுமை வீடுகள் கட்டும் திட்டம், தாய் திட்டம், அம்மா உணவகம், ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஆடுகள், விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருகிறார்.

ad

ad