புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2014




தெற்கத்தி மாவட்டங்களில் பண் ணையார் குடும்பம் பற்றி தெரிந்திராத ஆட்களே இல்லை. எந்நேரமும் எதிரிகளின் கழுகுக் கண்களில் இருப்பவர். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கல்யாணம், காதுக்  குத்து, கோயில் கொடைகளில் கலந்துகொண்டு ஆச்சர்யப்படுத்துபவர். நாடார் பாதுகாப்புப் பேரவையின் தலைவரான சுபாஷ் பண்ணையார் முதன்முறையாக நக்கீரனிடம் மனம் திறந்து பேசினார்.

தங்கள் குடும்பத்திற்கும், திண்டுக்கல் நந்தவனம்பட்டியில் கொலை செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதிபாண்டியனிற்கும் உள்ள இருபது வருட பகை, எதனால் ஏற்பட்டது..? இப்பொழுது அதனின் நிலை, தன்னுடைய பால்ய காலம், தங்களைப் பற்றிய தவறான கண்ணோட்டம், தங்கள் பெயரைப் பயன் படுத்தி கட்டப்பஞ்சாயத்து செய்யும் கூட்டம், அண்ணன் வெங்கடேஷ பண்ணையாரை சுற்றிய சதி என பல்வேறு தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் சுபாஷ் பண்ணையார். அதிலிருந்து...

""இப்ப எங்கள் தரப்பு மீது  வெடிகுண்டு வீசி கைதாகியிருக்கிறானே அந்த இன்ஜினிரியங் காலேஜ்  ஸ்டூடண்ட்... அவனை நான் போனமுறை திண்டுக்கல் நீதிமன்றத்திற்குப் போனபோதே பார்த்தேன். காலில் ஷூ போட்டு, சட்டையை இன் செய்து பந்தாவாக இருந்தான். ஆனால், அவன் பார்வை என்மேல் மட்டும் இருந்துச்சு. அதை கவனிச்சுக்கிட்டுதான் இருந்தேன். இந்த முறை பிடிபட்டிருக்கான். அவனுக இப்படி செய்வாங்க என தெரிஞ்சிருந்தால், நாங்க அப்பவே தப்பிக்க முடியாதபடி அடைச்சிருப்போம்ல'' என்றவர்...

""முதலில் என்னை செய்ய வருபவனுகளுக்கு இது என்ன பிரச்சினை, எதற்காக இந்த பிரச்சினை. அதை தெரிஞ்சுக்கிட்டு என்னை செய்ய வரட்டும். இது இப்ப, நேத்து நடந்த பகை அல்ல. இருபது வருஷத்திற்கு முன்னால் கிளம்பிய பகை. தூத்துக்குடி, திருச்செந்தூர் மெயின் ரோட்டில் இருக்கிற புல்லா வழி கிராமத்துல, அப்ப ஒரு இட பிரச்சினை. இடம் அப்பா பேரில் இருந்துச்சு. இன்னொருத்தன் அந்த இடத்துக்கு சொந்தம் கொண்டாடினான்.  அப்ப எதிர் தரப்பில் இருந்து கட்டப்பஞ்சாயம் பேசியது பசுபதி பாண்டியன். எங்கப்பா அசுபதி பண்ணையாரை அவங்க இடத்துக்கு வரச்சொன்னாங்க. எங்கப்பாவோ, "டாகு மெண்ட் என் பெயரில் இருக்கு. வேணும்னா கோர்ட்டுக்குப் போகலாம். கட்டப் பஞ்சா யத்திற்கு எல்லாம் நான் ஒத்துப்போக மாட்டேன்' என்றிருக்கிறார். அப்ப உப்பளங் களில் மாமூல் வசூல், கட்டப்பஞ்சாயத்து செய்துகொண்டிருந்த பசுபதி பாண்டியன், நாம கூப்பிட்டு ஒருத்தன் வரலையான்னு கோபப் பட்டு, பழைய காயலில் டீ குடிச்சுட்டு இருந்த எங்கப்பாவை 1993-ஆம் வருஷம் சனவரியில் வெட்டிக் கொலை செய்தாங்க. அத்தோடு மட்டுமில்லாமல் அதே வருஷத்துல, சூலை மாதத்தில் சிவன்கோயில் பக்கம் சைக்கிளில் போய்க்கொண்டிருந்த எங்க தாத்தா சிவசுப்பிரமணியம் பண்ணையாரை கொலை செய்தாங்க.

 அதுபோல், தாத்தா இறந்த மூன்றாவது நாள், கோவன்காட்டில் அளத்து கூலி வேலைக்குப்போன இரண்டு நாடார்களை கொலை செய் தாங்க. 1994-ஆம் வருஷமும் முள்ளக் காடு பண்ணைவீடு மூக்கன் நாடாரின் மகன் பாலசந்தரையும், அவருடைய நண்பனையும் சேர்த்து டபுள் மர்டர் அடிச்சாங்க பசுபதி பாண்டியன் டீம்.  இப்படி ஒவ்வொன்றாக எங்க தரப்பில் இழந்துகொண்டிருந்த வேளையில்... என் அண்ணன் வெங்கடேஷ பண்ணையார் வீட்டிற்கு காவல் காரன் ஆனார்..


அப்ப சேலம் லா காலேஜில் இரண்டாம் வருடம் படிச்சிட்டு இருந்த நான், படிப்பை விட்டு விட்டு 19 வயசிலே மூலக்கரைக்கு வந்தேன். அண்ண னோடு சேர்ந்துட்டு எங்க பக்கம் விழுந்த உயிர்களுக்கு, பதிலடி தர ஆரம் பித்தோம். இந்த இருபது வருடத்தில் முதல் பத்து வருஷம் அண்ணன் வெங்கடேஷ பண்ணையார் காவல்காரனாக இருந்தாரு. அடுத்த பத்து வருஷத்திற்கு நான் காவல்கார னாக இருந்து வர்றேன். எந்தச் சூழ்நிலையிலும் தேவையில்லாத உயிர்களை நாங்க தொட்ட தில்லை. எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களை மட்டுமே பழி தீர்த்தோம். எப்பொழுதுமே எட்டுபேருடன் இருக்கும் கர்ணனை, மற்றவர்களை அப்புறப்படுத்திவிட்டு, ஆறுமுகநேரியில் கர்ணனை மட்டுமே பழி தீர்த்தோம். அதற்குப்பிறகு பழையகாயலில் பாலகிருஷ்ணன், தூத்துக்குடி மூன்றாவது மைலில் பீர் முகம்மது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்க குடும்பத்தை அழிச்ச பசுபதி பாண்டியனுக்கும் அந்தக்  கூலிப்படைக்கும்தான் தகராறே. பதிலுக்குப் பதில்.. எல்லாம் முடிந்து விட்டது. இதில் சாதி கிடையாது. ஆனால், சாதி பிரச்சினை யாக கொண்டு போகுது ஒரு தரப்பு. என்னை செய்தால், பசுபதி பாண்டியன் இருந்த இடத்திற்கு வந்துவிடலாம் என்ற நினைப்பும் அவர்களுக்கு உண்டு. அதேவேளையில், சாதி பிரச்சினையாக சித்தரித்து ஆயுதம் தூக்குகிற அவனுகளுக்கு வயசு இருபது, இருபத்தைந்தை தாண்டாது. அவனுகளுக்கு என்ன தெரியும்?

இன்னொன்று "பண்ணையார் வார்றாரு... பண்ணையார் வார்றாரு...' அப்படின்னு பயங்காட்டு றாங்க. எல்லோரும் பயப்படுற மாதிரி பண்ணையார் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. பண்ணையார் குடும்பம் தோன்றி, இது ஒன்பதாவது தலைமுறை. பண்ணையார் என்பது வெள்ளைக்காரங்க எங்களுக்கு கொடுத்த பட்டம். விவசாயமும், உப்பளமும்தான் எங்க தொழிலே. நாங்க சம்பாதித்தோமோ, இல்லையோ எங்க அப்பா, தாத்தா சம்பாதிச்சு வைச்ச சொத்தை நாங்க துளிகூட விற்கலை. டைட்டானியம் பார்க் இருக்கிற இடம்... எங்க இடம். அரசாங்கத்துக்கு நாங்க கொடுத்தது. அந்தளவிற்கு பரம்பரை சொத்து எங்களுடையது. யாரையும் கட்டப்பஞ்சாயத்து செய்து சம்பாதிக்கணும் என எங்களுக்கு சூழ்நிலை இல்லை. சிலபேர் பண்ணையார் பேரை சொல்லி பஞ்சாயத்து பண்றதாக தகவல் வருது. அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமு மில்லை'' என்றவர்... "நடந்துகொண்டே பேசலாமே' என்று எழுந்து தொடர்ந்து பேசினார். ""ஏய்... பண் ணையார் பெரிய ஆளு. அவரைப் பார்க்க முடியாது என எங்களுக்கும் எங்களைத் தேடி வருபவர்களுக்கும் நடுவில் இருந்து கொண்டு அடைப்பைப் போடுகிறவர்களும் உண்டு. இதனால் உண்மையாய் எம்மை நாடி வருபவர்களை இழப்பதும் உண்டு. அண்ணன் வெங்கடேஷ பண்ணையாரின் கொலையி லும் இதுதான் காரணமே. என்னைச் சுற்றியும் அப்படி இருந்தது. இப்பொழுது அதை நீக்கிவிட் டேன். எல்லோருக்கும் பொதுவானவன் நான். எப்போது வேண்டுமானாலும் என்னைப் பார்க்க லாம். இப்பவும் இங்கே இருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் வந்துட்டுப் போறாங்க. நானும் அவங்க வீட்டு விஷேசத்தில் கலந்துகொள்கிறேன்.  

கல்லூரியை விட்டு ஏறக்குறைய காவலுக்காக ஆயுதம் எடுத்து 21 வருடம் ஆச்சு. இப்பவும் நான் காவல்கார னாகத்தான் இருக்கேன். எப்பவுமே என்னை நம்பிய மக்களுக்கு காவல் காரனாக இருப்பேன். சாதிக்காரனாக இருக்கமாட்டேன்...'' என்று உறுதியாகக் கூறி நமக்கு விடை கொடுத்தார் சுபாஷ் பண்ணையார்.

ad

ad