புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2014


காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் நாடாளுமன்ற தற்காலிக சபாநாயகராக நியமனம்
முன்னாள் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் நாடாளுமன்ற தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.


நாடாளுமன்ற செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிய லோக்சபாவின் தற்காலிக சபாநாயகராக கமல்நாத்தை நியமிக்கும்படி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதையடுத்து 16வது லோக்சபாவுக்கு, புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படும் வரை, சபாநாயகருக்கு உரிய கடமைகளை நிறைவேற்ற, தற்காலிக சபாநாயகராக கமல்நாத்தை ஜனாதிபதி நியமித்துள்ளார். லோக்சபாவுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பது உட்பட, சில பணிகளை, கமல்நாத் மேற்கொள்வார். இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா தொகுதியில் ஒன்பதாவது முறையாக கமல்நாத் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

ad

ad