புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2014

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து;
வலது “கை” இழந்தவரின் மணிக்கட்டை இடது கையுடன் பொருத்தி சாதனை

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள அருவங்காட்டில் மத்திய அரசின் “

கார்டைட்” வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இந்திய இராணுவத்திற்கு தேவையான வெடி மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த ஜூன் 2-ஆம் தேதி தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாத்ரு யாதவ் (வயது-41) என்பவரது இரு கைகளின் மணிக்கட்டுப் பகுதிக்குக் கீழே உள்ள கை துண்டானது.

இதையடுத்து துண்டான கைகளுடன் மாத்ருயாதவ், கோவை கங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்தபோது இடது கை மணிக்கட்டின் கீழ்பகுதி மீண்டும் இணைக்க முடியாத அளவுக்கு சேதமடைந்து இருந்தது. அதேபோல வலது கையின் மணிக்கட்டுக்கு மேல்பகுதி அகற்ற வேண்டிய நிலையில் இருந்தது.

இதையடுத்து, மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மற்றும் கை, நுண்ணறிவு சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் எஸ்.இராஜசபாபதி தலைமையிலான மருத்துவர் குழுவினர் மாத்ருயாதவ்க்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனர்.

இதில், மாத்ருயாதவின் துண்டிக்கப்பட்ட வலது மணிக்கட்டுக்கு மேல் பகுதியை (கை விரல்கள் அடங்கிய பகுதி) இடது கையுடன் இணைக்க முடிவு செய்தனர். அதன்படி 8 மணி நேரம் நடைபெற்ற அறுவைச் சிகிச்சை மூலம் வலது “கை” மணிக்கட்டு இடது கையுடன் இணைக்கப்பட்டது.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் இராஜசபாபதி கூறியதாவது:-அருவங்காடு மருத்துவமனையில் வெடிமருந்து காயத்துடன் வந்த தொழிலாளிக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததுடன் துண்டான கை பகுதிகளை பாதுகாப்பான முறையில் கொண்டு வரப்பட்டன. வலது கையின் மணிக்கட்டு மேல் பகுதியை இடது கையுடன் இணைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன.
வலது கையின் கட்டைவிரல் பகுதி இடது கையின் கட்டைவிரல் பகுதிக்கு எதிர்த்திசையில் அமைந்திருக்கும்.

அப்போது கட்டை விரலுக்கான நுண்ணிய நரம்புகளை கவனமாக இணைக்க வேண்டும். எனவே 3 மைக்ரோ அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் குழு மூலம் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு 6 மாதம் முதல் 9 மாதங்கள் வரையில் பிசியோதெரபி பயிற்சி அளிப்பதன் மூலம் அவர் குணமடைந்து விடுவார் என்று தெரிவித்தார்.

ad

ad