புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2014

அளுத்கம தாக்குதல்; ஆர்ப்பாட்டத்தால் அதிர்ந்தது யாழ்ப்பாணம் 
அளுத்கம , பேருவளை, தர்கா நகரில் வாழும் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து யாழ்.
நகரப்பகுதியில் இன்று காலை கண்டனப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

களுத்துறை மாவட்டத்தில் கடந்த வாரம் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் முஸ்லீம் மக்கள் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்டனர். இதில் 3 மாத குழந்தை உட்பட 4பேர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறாக சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்று வரும் வெறித்தனமான தாக்குதல்களைக் கண்டித்து இன்று காலை 9 மணி முதல் 10மணி வரை யாழ். நகரில் கண்டனப்போராட்டம் இடம்பெற்றது.

இப்போராட்டத்தில் கட்சி பேதங்கள்  இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் முஸ்லீம் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்த கண்டனப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

மகிந்தரே உமது சிம்மாசனத்திற்காக சிறுபான்மை மக்களை பலியிடாதே, இன அழிப்பினால் நல்லிணக்கம் உருவாகுமா?,  இன்னுமொரு கறுப்பு யூலை எமக்கு வேண்டாம் அரசே , அளுத்கம பேருவளை மக்களுக்கு நீதிவேண்டும் , அளுத்கம தாக்குதலுக்கு பொதுபல சேனாவே பொறுப்பு போன்ற கோசங்களை எழுப்பியவாறும் சுலோகங்களைத் தாங்கியும் போராட்டத்தினை நடாத்தினர்.

போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாண சபையின்  அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், ஆனல்ட் அஸ்மின், பரஞ்சோதி, ரவிகரன் ,ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதிநிதி பாஸ்கரா , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் கஜேந்திரன்,  மற்றும் முஸ்லீம் அமைப்புக்கள் , பொதுமக்கள் என நூற்றுக் கணக்காணோர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதேவேளை, முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் கதவடைப்புக்கள் , கண்டனப் போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













ad

ad